சொன்னதை செய்த கேப்டன் வீராட் கோஹ்லி
இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதியை உறுதி செய்தது. இப்போட்டியில் 87 வயதான சாருலதா படேல், வீரர்கள், ரசிகர்கள் என அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கன்னத்தில் மூவர்ண கொடி வரைந்து மைதானத்திற்கு வந்த அவர், இந்திய வீரர்கள் ரன் 'மழை' பொழிந்த போதெல்லாம், 'உவ்சேலா' ஊதி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
போட்டி முடிந்த பின், இந்திய கேப்டன் கோஹ்லி, ரோகித் சர்மா இவரை சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது, மீதமுள்ள போட்டிகளையும் காண வர வேண்டும் என விராத் கோஹ்லி பாட்டியிடம் வலியுறுத்தினார். தன்னிடம் அதற்கான டிக்கெட் இல்லை எனக் கூறிய பாட்டிக்கு, மீதமுள்ள போட்டிகளுக்கு டிக்கெட் வாங்கி தருவது தனது பொறுப்பு என கோஹ்லி உறுதி அளித்தார்.
ஒரே இரவில் பிரபலமான அவருக்கு அளித்த வாக்குறுதியை கோஹ்லி தற்போது நிறைவேற்றி உள்ளார். இந்திய அணி விள...
