இவர் தான் நடிகரின் விஷாலின் மனைவி படம் உள்ளே
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான நடிகர் விஷால் தன்னுடைய திருமணம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கென்று கட்டிடத்தைக் கட்டி முடித்த பின்பு, அந்த கட்டிடத்தில் தான் தனக்கு திருமணம் நடக்கும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் அறிவித்திருந்தார்.
அதுமுதலே அனைவரின் எதிர்பார்ப்பும் விஷால் யரைத் திருமணம் செய்ய போகிறார் என்ற கேள்வி இருந்து வந்தது.
எந்த நிகழ்ச்சியில் விஷால் கலந்து கொண்டாலும் தன்னுடைய திருமணம் பற்றிய செய்தியை எப்போது அறிவிப்பார் என்று அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டது.
சென்ற வாரம் கூட விஷால் திருமணம் பற்றிய செய்தி வைரலாக பரவியது. அதற்கு விஷால், என் திருமணம் பற்றியும், நான் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணைப் பற்றியும் விரைவில் அறிவிப்பேன் என்று கூற...
