துப்பறிவாளன் – திரைவிமர்சனம் (பிரமிக்கவைகிறான் ) Rank 3.5/5
நீண்ட இடைவெளிக்கு பின் தமிழ் சினிமாவில் வந்து இருக்கும் ஒரு துப்பறியும் கதை என்று தான் சொல்லணும் கதையில் பல இடியாப்ப சிக்கல் இருந்தாலும் திரைகதை தெளிந்த நீரோடை போல அமைத்துள்ளார். இயக்குனர் மிஷ்கின் படத்தின் மிக பெரிய பலம் திரைகதை அதே போல விஷால் இந்த கதைக்கு விஷால் தான் மிக பொருத்தம் என்றும் சொல்லலாம் அதே போல புதுமையான வினய் வித்தியாசமான அண்ட்ரியா கதாபாத்திரம் பிரசன்னா இவருக்கும் இது ஒரு புதுமை தான் எல்லாத்தையும் விட படத்தில் முக்கியமான ஒரு பாத்திரத்தில் பாக்யராஜ் முதல் முறையாக வில்லனாக ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிக நேர்த்தியாக தேர்வு செய்து படத்தை உருவாகியுள்ளார் இயக்குனர் மிஷ்கின்
கதைக்கும் கதபாதிரத்துக்கும் தேவையான பாத்திரங்களை மிக அழகா நேர்த்தியாக தேர்ந்த்டுத்து உள்ளார். சிம்ரன் படத்தில் ஒரு இரு காட்சிகள் வந்தாலும் மனதில் நிற்கிறார் அதேபோல ஜான் விஜய், நாயகி அணு இம்மானுவேல் தலைவாச...
