வருகிற ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தமிழ் திரைபடங்களின் படபிடிப்பும் , வெளியீடும் ஆரம்பமாகிறது – விஷால்
நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது . இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் , பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு , கௌரவ செயலாளர் கதிரேசன் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்களிடம் விஷால் பேசியது :- தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு க் கொடுத்த FEFSI தொழிலாளர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். தமிழ் திரைத்துறை ஜூன் மாதம் முதல் முழுமையாக கணினிமயமக்கபடும் இனி முழு வெளிப்படைத்தன்மையோடு இருக்கும். தயாரிப்பாளர் சங்கமே டிக்கெட் விற்பனை இணையதளத்தை தொடங்கும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகப்பட்ச டிக்கெட் விலைக்கு மேல் எங்கும் விற்கப்படாது. அது கண்காணிக்கப்படும். அதை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது . தமிழ் சினிமா வெளியீட்டை முறைப்படுத்...

