சினிமா வேலை நிறுத்துவதால் ஏற்படபோகும் பிரச்சனைகள் என்ன கலக்கத்தில் தமிழ் சினிமா
மே 3௦ம் தேதியில் இருந்து தமிழ் சினிமா முழு வேலை நிறுத்தம் என்ற அறவிப்பு தயாரிபாளர் சங்கம் மற்றும் விநியோகிஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர் சங்கம் நடிகர் சங்கம் என்று ஒருகிணைந்த குழு முடிவெடுத்துள்ளது. இதனால் பலன் என்ன என்பதை விட பாதிப்பு என்ன என்று தான் பலரின் கேள்வி இந்த மாதம் வெளியாக இருந்த முக்கிய படங்கள் முதல் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் படங்களும் சேர்ந்து மொத்த படங்களின் ரிலீஸ் நிலை தேக்கம் வரும் என்ற அச்சத்தில் உள்ளனர் திரையுலகத்தினர்.
மே 30-ம் தேதி முதல் தமிழ் திரையுலகம் வேலைநிறுத்தம் செய்யவிருப்பதால், மே 12-க்குப் பிறகு வெளியாகவுள்ள படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், செயலாளர் ஞானவேல் ராஜா, திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்...
