
மிரளவைக்கும் இசை மற்றும் புதிய கதையம்சத்தில் ஊருவாகிருக்கும் பரத் நடிக்கும் “சிம்பா”
பரத், பிரேம்ஜி, ரமண, பானு மெஹர, சுவாதி டிக்சித் , பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் ,கேசவன் ஸ்வேதா அசோக் மற்றும் பலர் நடிப்பில் விஷால் சந்திரசேகர் இசையில் சின்னு சித்தார்த் ஒளிப்பதிவில் வினோத் ராஜ்குமார் மற்றும் ஆண்டனி கலை இயக்கத்தில் அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் சிம்பா இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது .
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக விஷால் மிஷ்கின் வெங்கட் பிரபு இயக்குனர் காந்தி கிருஷ்ணா ,ஜெயம்ரவி, தன்சிகா , ப்ருதிவ் பாண்டியராஜ்,அரவிந்த் ஆகாஷ் , பிரசன்னா மற்றும் சினேகா பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் படத்தின் ட்ரைலர் மற்றும் நான்கு பாடல்கள் திரையிட்டனர். தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லபடாத கதை என்று சொல்லலாம் ஏன் யாரும் முயற்சி செய்யாத கதை என்றும் சொல்லலாம் ஸ்டோனர் கதை என்று சொல்லுவார்கள...