விஜய் 61 விஜய் தேர்ந்தடுத்த மேலும் ஒரு காமெடி நடிகர்
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். சென்னை, மதுரை, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. விஜய் 61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜுன் 22-ஆம் தேதி வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது.
இப்படத்தில் முதன்முறையாக விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடித்து வருகின்றனர். மேலும் சத்யராஜ், ஹரீஷ் பேரடி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இயக்குநரும், நருகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
காமெடியை பொறுத்த வரை வடிவேலு, சத்யன், கோவை சரளா என நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இணைந்திருக்கிறது. இந்நிலையில், காமெடிக்கு மேலும் தெம்பூட்டும் வகையில் யோகி ப...
