Friday, April 17
Shadow

Tag: கொலையுதிர் காலம்

கொலையுதிர் காலம் திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

Review, Top Highlights
சிறு வயது முதல் ஆசிரமத்தில் வளர்ந்த நயன்தாராவால் பேசவும், கேட்கவும் முடியாது. ஆனால், அபாரமாக ஓவியம் வரையக் கூடியவராக நயன் இருக்கிறார். இந்தச் சூழலில், அந்த ஆசிரமத்தின் உரிமையாளரை, அதற்கு முன் ஒருமுறை கூட பார்த்திராத நயன், அச்சு அசலாக வரைந்து வைத்திருக்கிறார். இதனால், லண்டனில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ஆசிரம உரிமையாளர், நயன்தாராவை வளர்ப்பு மகளாக தத்தெடுத்து கொள்கிறார். ஆசிரமத்தின் உரிமையாளர் உயிரிழக்கும் நிலையில், லண்டனில் இருக்கும் சொத்துக்களை வளர்ப்பு மகள் நயன்தாராவிற்கு எழுதி வைத்துவிடுகிறார். லண்டனுக்கு செல்லும் நயன்தாராவிடம், ஆசிரம உரிமையாளரின் உறவினர்களான பூமிகா மற்றும் அவரது கணவர், இது எங்களுக்கு சொந்தமான சொத்து என்று முறையிட்டு சொத்தை அபகரிக்க நினைக்கிறார்கள். இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் நயன்தாராவை கொலை செய்ய முயற்சி செய்கிறார். இறுதியில் அந்த மர்ம நபர் யார்? எதற்காக நயன்தார...

மீண்டும் தள்ளி போகிறது கொலையுதிர் காலம் ரிலிஸ் தேதி

Latest News, Top Highlights
லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவின் கொலையுதிர் காலம் திரைப்படம், தடைகள் பல கடந்து, வரும் 26ம் தேதி திரைக்கும் வரும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தை வாங்க ஆளில்லாத காரணத்தால், இந்த படத்தின் வெளியிடு ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா நடிக்கும் படம் கொலையுதிர் காலம். அமெரிக்காவின் HUSH என்ற படத்தின் ரீ- மேக் ஆக தயாரான இந்த புதிய படத்தில், நயன்தாராவுடன் பூமிகா, பிரதாப் போத்தன் மற்றும் ரோகிணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். CHAKRI TOLETI இயக்கி உள்ள கொலையுதிர் காலம் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....
தடைகளை தாண்டி உறுதியானது நயன்தாராவின் கொலையுதிர் காலம் ரீலிஸ் தேதி

தடைகளை தாண்டி உறுதியானது நயன்தாராவின் கொலையுதிர் காலம் ரீலிஸ் தேதி

Latest News, Top Highlights
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் கொலையுதிர் காலம் படத்தின் ரீலிஸ் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் கொலையுதிர் காலம் படத்தின் வரும் 26ம் தேதி ரீலிஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த படம் கடந்த ஜூன் 14ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பணபிரச்சினை காரணமாக இந்த படத்தின் வெளியிடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பில்லா 2 மற்றும் உன்னைப் போல் ஒருவன் படத்தை இயக்கிய இயக்குனர் சகிரி டோலேடி இயக்கியுள்ளார். நடிகை நயன்தாரா வாய் பேச முடியாத மற்றும் காது கேட்காத கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தை மதியழகனின் எச்சிட்ரா எண்டர்டேய்ன்மென்ட் தயாரித்துள்ளது....