Tuesday, April 28
Shadow

Tag: #சுட்டுப்பிடிக்கஉத்தரவு #Vikranth

விக்ராந்த், சுசீந்திரனை சுட்டுப் பிடிப்பாரா போலீஸ் அதிகாரி மிஷ்கின்

விக்ராந்த், சுசீந்திரனை சுட்டுப் பிடிப்பாரா போலீஸ் அதிகாரி மிஷ்கின்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன். அதே போல் வளர்ந்து வரும் நடிகர் விக்ராந்த். இந்த மூன்று பிரபலங்களுக்கும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இந்த படத்தை இயக்குகிறார். இப்படம் குறித்து இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பா பேசுகையில், ''விக்ராந்த் மற்றும் சுசீந்திரன் ஆகிய இருவரும் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள். ஒரு நாள் அவர்கள் பணியில் இருக்கும் போது ஒரு திகிலான குற்றச் சம்பவம் ஒன்று நடக்கிறது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஷ்கின் நடிக்கின்றார். இதற்கு பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் கதை. பார்வையாளர்களை ...