Saturday, February 15
Shadow

விக்ராந்த், சுசீந்திரனை சுட்டுப் பிடிப்பாரா போலீஸ் அதிகாரி மிஷ்கின்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன். அதே போல் வளர்ந்து வரும் நடிகர் விக்ராந்த். இந்த மூன்று பிரபலங்களுக்கும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர்.

கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இந்த படத்தை இயக்குகிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பா பேசுகையில்,

”விக்ராந்த் மற்றும் சுசீந்திரன் ஆகிய இருவரும் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள். ஒரு நாள் அவர்கள் பணியில் இருக்கும் போது ஒரு திகிலான குற்றச் சம்பவம் ஒன்று நடக்கிறது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஷ்கின் நடிக்கின்றார். இதற்கு பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் கதை. பார்வையாளர்களை சீட்டின் நுனியில் உட்கார்ந்து விறுவிறுப்போடு பார்க்கவைக்கும் படியாக படம் இருக்கும் ” என்றார்.

இயக்குனர் மிஷ்கின், நடிகர் விக்ராந்த் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தில் இவர்களுடன் பிரபல இயக்குனர் சுசீந்திரனும் நடிக்க உள்ளார். கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்குகிறது.

Leave a Reply