ஜாங்கோ திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)
அறிமுக இயக்குனர் மனோ கார்த்திகேயன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் ‘ஜாங்கோ’. இந்த படத்தில் சதீஷ்குமார், மிருணாளினி ரவி, கருணாகரன், ரமேஷ் திலக் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சிவி குமார் தயாரித்திருக்கிறார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். திரில்லர் மற்றும் அறிவியல் புனைவு திரைப்படமாக ‘ஜாங்கோ’ வெளியாகி இருக்கிறது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி அடைந்ததா? இல்லையா? என்பதை இங்கு பார்க்கலாம்.
‘ஜாங்கோ’ திரைப்படம் தமிழிலில் வெளியான முதல் “Time loop” திரைப்படம். ‘ஜாங்கோ’ என்றால் ஜெர்மானிய மொழியில் மீண்டும் எழுவேன் என்று அர்த்தம். பொதுவாகவே திரைப்படங்களில் பழைய காலத்திற்கு செல்வது அல்லது எதிர்காலத்தில் போவது என்று தான் இருக்கும். ஆனால், இது ஒரே நாளில் திரும்பத் திரும்ப நடைபெறும் நிகழ்வை மையமாக கொண்டும், காட்சிக்கு காட்சிக்கு சுவாரசியமும் எதிர்பா...
