“தேவி” இசையில் வெளியீட்டில் தமன்னா கண்ணீர்
பாராட்டுக்காக ஏங்கும் குணம் சாதாரண மக்களிடம் மட்டுமல்ல, நட்சத்திரங்களுக்கும் உண்டு. சிலரால் அந்தப் பாராட்டைத் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு ஆனந்தமாக இருக்கும். அப்படி ஒரு ஆனந்தத்தில் கண்ணீர் மழையுடன் நேற்று தமன்னா அமர்ந்திருந்தார். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா ஜோடியாக மூன்று மொழிகளில் தயாராகியுள்ள படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
அப்போது பிரபுதேவா தமன்னாவைப் பற்றி பாராட்டிப் பேசும்போதுதான் அப்படி ஒரு நெகிழ்ச்சியான சம்பவம். பிரபுதேவா பேசும் போது, “தமன்னா என்னை பிளைட்லதான் சந்திச்சத பத்தி சொன்னாங்க. ஒரு முறை பிளைட்ல போகும் போது, ஒரு ஃபாரீன் பொண்ணு என்னைப் பார்த்து கையாட்டினாங்க. நான் பக்கத்துல இருந்த என் பிரன்ட் கிட்ட, பாருடா எனக்கு பாரீன்லலாம் ரசிகைகள் இருக்காங்கன்னு சொன்னேன், அதுக்கு அவன் டேய், அது தமன்னாடான்னு சொன்னான். அப்படிப்பட்ட ஒரு பாரீன் பெண்ணை இந்த தேவி படத்...
