தேவி படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் தன் பட குழுவினரை பாராட்டிய பிரபு தேவா
ஒரு கலைஞனுக்கு தேவைப்படுவது பணம் மட்டுமே இல்லை. அத்துடன் தங்களின் உழைப்புக்கு ஏற்ற கௌரவத்தை தான் அவர்கள் விரும்புகிறார்கள்... ஒரு திரைப்படம் வெற்றி பெற்றுவிட்டால், அந்த வெற்றிக்கு உறுதுணையாய் இருந்து பணியாற்றிய நடிகர் நடிகைகளுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் தங்களின் பெயர் பதித்த கேடயங்களை வழங்குவது முன்பு வழக்கமாக இருந்து வந்தது.... கால போக்கில் அத்தகைய செயல் வெகுவாக மறைந்து போனது. "தேவி" படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு 'பிரபுதேவா ஸ்டுடியோஸ்' சார்பில் அந்த கலாச்சாரத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்திருக்கிறார்கள் பிரபுதேவா மற்றும் டாக்டர் கே கணேஷ். வெற்றிக்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும், அவர்களின் பெயரும், திரைப்படத்தின் பெயரும் பதித்த கேடயங்களை வழங்கி கௌரவித்து இருக்கிறார்கள் பிரபுதேவா மற்றும் டாக்டர் கே கணேஷ்.
பிரபு, நாசர், ஜெயம் ரவி, கார்த்தி, ஜீவா, உதயநிதி ஸ்டா...
