Sunday, June 21
Shadow

Tag: தேவ் ஆனந்த்

நடிகர் தேவ் ஆனந்த் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
தரம் தேவ் கிஷோரிமல் ஆனந்த் ஒரு பிரசித்தி பெற்ற இந்திய பாலிவுட் நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். தேவ் தனது மூன்று சகோதரர்களில் இரண்டாவதாக பிறந்தவர். அவரது மூத்த சகோதரர் சேதன் ஆனந்த் ஒரு திரைப்பட இயக்குனர் ஆவார், அதேபோல் அவரது இளைய சகோதரர் விஜய் ஆனந்தும் இயக்குனர் ஆவார். அவர்களின் சகோதரி, ஷீல் காந்தா கப்பூர், புகழ் பெற்ற ஹிந்தி மற்றும் ஆங்கில திரைப்படத்துறையின் இயக்குனர் சேகர் கப்பூரின் தாயார் ஆவார். பஞ்சாப் மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முந்தைய குர்தாஸ்பூர் மாவட்டத்தில் செல்வவளம் மிக்க வக்கீல் கிஷோரிமல் ஆனந்த் மகனாக தரம் தேவ் குந்தன் லால் கிஷோரிமல் ஆனந்த் பிறந்தார். லாகூரில்(தற்போது பாகிஸ்தானில்) உள்ள ஒரு அரசுக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து இளங்கலைப்பட்டம் பெற்றார். நடிப்பின் மேல் அவர் கொண்டிருந்த காதல், சொந்த நகரைத் துறந்து இந்தி திரைப்படத்தொழிலின் மையமான மும்பை நோக்கி வரவழ...