நடிகை நந்தனா சென் பிறந்த தின பதிவு
நந்தனா சென் என்பவர் ஓர் இந்திய நடிகையாவார். எழுத்தாளராகவும் சமூகச் செயற்பாட்டளாராகவும் அறியப்படுகிறார்.
நந்தனா சென் "நோபல் பரிசு பெற்ற" பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் மற்றும் பத்மஸ்ரீ நபநீதா தேவ் சென் தம்பதியரின் மகளாவார், நபநீதா தேவ் சென் தற்கால வங்காள இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவராவார்.
நந்தனா சென், 1970 ஆகஸ்டு 19 இல், இந்தியாவின் கிழக்கத்திய நகரமான கல்கத்தாவில் பிறந்தார். அவர் தனது வளரும் பருவத்தை ஐரோப்பா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களில் கழித்தார். ஆர்வர்டு பல்கலைக் கழகத்தில் இலக்கியம் பயின்றார்.இலண்டன் இராயல் அகாதமியில் நாடகக்கலையில் பயிற்சி பெற்றார்.
சென் "த டால்" திரைப்படத்தின் மூலமாக தனது தொழில் வாழ்க்கையைத் துவங்கினார். பிளாக் என்ற திரைப்படத்தில் ராணி முகர்ஜியின் 17 வயது சகோதரியாக நடித்ததன் மூலம் நந்தனா பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமானார். 2008 இல் பி...
