Monday, April 21
Shadow

கத்தி சண்டை படத்தில் படு கிளாமராக வரும் தமன்னா

தமிழ் சினிமாவில் நுமர் ஒன் இடத்தில் இருந்த தமன்னா தற்போது அப்ப அப்ப நடிக்க வருகிறார் இந்தி தெலுங்கு என பிஸியா இருக்கிறார். தமிழில் சொல்லிகொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை தமன்னா என்றாலே கிளாமர் என்றாகி விட்டது. தனது பர்பாமென்சினால் ரசிகர்களை அவர் கவர்ந்ததை விட கிளாமரைக்கொண்டுதான் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.

அந்த வகையில், நயன்தாராவுக்கு பில்லா, சமந்தாவுக்கு அஞ்சான் ஆகிய படங்கள் அமைந்தது போன்று தமன்னாவுக்கு பையா உள்ளிட்ட சில படங்கள் அமைந்தன. அதையடுத்து அவரது கமர்சியல் வேல்யூவும் அதிகரித்தது.

அதனால் அதை தக்க வைத்துக்கொள்ளும் வகையில். இப்போது வரை அவ்வப்போது ஒரு படத்தில் கவர்ச்சிமயமாக நடித்து ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்.

இந்நிலையில், விஜயசேதுபதியுடன் நடித்த தர்மதுரையில் கிராமத்து மாடர்ன் பொண்ண நடித்த தமன்னா, தற்போது சுராஜ் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ள கத்திச்சண்டை படத்திலும் படு கிளாமராக நடித்திருக்கிறார்.

பெரும்பாலான காட்சிகளில் ஷாட்ஸ், டீசர்ட் என அனல் பறக்கும் கிளாமரை வெளிப்படுத்தி நடித்திருக்கிறாராம்.

அதோடு பாடல் காட்சிகளில் பையாவை நினைவுபடுத்தும் வகையில் நடித்துள்ள தமன்னா, ஒரு சிறிய இடைவெளிக்குப்பிறகு இந்த படத்தில் இளவட்ட ரசிகர்களுக்கு செம விருந்து கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.

Leave a Reply