
சினிமாவோ என்பது பல ஆயிரம் குடும்பங்களுக்கான ஒளிவிளக்கு என்றுதான் சொல்ல வேண்டும். இன்றைக்கும் எத்தனையோ தயாரிப்பாளர்கள் பல்வேறு கனவுடளுடன் ஒரு படம் தயாரிக்க முன் வந்து கொண்டுதான் இருக்கின்றார்க. ஆரம்பத்தில் கையில் உள்ள பணத்தில் படம் எடுக்க தொடங்கி பிறகு கடன் வாங்கி தன் சொத்து உடமை எல்லாவற்றையும் விற்று படம் தயாரிக்கும் அல்லது தயாரித்த எத்தனையோ தயாரிப்பாளர்கள் கோலிவுட்,டோலிவுட், பாலிவுட்என்று என்று வுட்-களிலும் உலா வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இப்படி வரும் ஒரு தயாரிப்பாளர் மூலம் ஒரு படம் தயாரானால் குறைந்த பட்சம் நூறு குடும்பங்கள் அதாவது மினிமம் ஒரு ஆறு மாத காலம் நிம்மதியாக வாழும் என்ற ஒரு கணக்கும் இருக்கிறது. ஆக ஒவ்வொரு சினிமா தயாரிப்பாலும் பல ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது.
ஆனால் இதையெல்லாம புரிந்து கொள்ளாமல்
யாரையோ அழிக்க எங்கோ இருந்து அயல்நாட்டில் அல்லது இதே தயாரிப்பாளர் கூடவே இருந்து கொண்டு கோடிக்கணக்கில் கொட்டப்பட்டு தயாரான திரைப்படத்தை திருட்டு தனமாக இணையத்தளம் மற்றும் டி.வி டியில் வெளியிடுவது வாடிக்கையாகி விட்டது.
இதன் உச்சக் கட்டமாக ஒரு சில படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னே இணைய தளத்தில் ரிலீஸ் செய்து விடுவதுதான் இன்னும் அதிர்ச்சி. இதனால் எத்தனையோ தயாரிப்பாளர் வாழ்கை மட்டுமில்லாமல் முன்னரே சொன்னது போல்க் எத்தனையோ சினிமாவை நம்பி வாழும் குடும்பங்களும் அழிந்து வருகிறது.
இதையெல்லாம் செய்யும் மிக மோசமான குணம் கொண்ட வக்கிரபுத்தியுள்ள திருடர்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை இவன் குடும்பம் இவன் பிள்ளைகள் நல்ல இருக்க பல ஆயிரம் குடும்பங்களை நாசம் செய்வது எந்த விதத்தில் நியாயம் சொல்லுங்க.
குறிப்பாக தமிழ் ராக்கர்ஸ் என்ற நிறுவனம் பல பேரில் செய்து வருவதும் தன் தர்ப்பை ஒரு பத்திரிக்கையில் பேட்டியாக கொடுப்பதும் அதையும் பிரபல சேனல் திரும்பத் திரும்பச் சொல்லி வெறுப்பேற்றுவதும் தமிழ் திரையுலகில் மட்டும் நடக்கும் சாபக் கேடு என்றுதான்சொல்ல வேண்டும்.
தமிழ் ரசிகன் இப்படி நல்ல உண்மையான சினிமா ரசிகன் இப்படி திருட்டு தனம் செய்யமாட்டான் என்று நம்பி இருந்தால் . ஊர் தாலி அறுத்து மறு தாலி கட்டும் தமிழ் ராக்கர்ஸூக்கு போட்டியாக தமிழ் ரசிகன் என்ற பெயரிலேயே ஒரு இணைய தளம் ரிலீஸ் ஆகாத படத்தை இணைய தளத்தில் வெளியிட முஸ்தீபு காட்டுகிறது.
இவனுக்கு ஏன் இந்த கொடூரமான குணம் என்று தெரியவில்லை அடுத்தவர்கள் இரத்ததை உறிந்து வாழ துடிப்பது ஏன் என்று தெரியவில்லை. மேலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டிய தயாரிப்பாளர் சங்கமும் இதை ஒரு அரசு விதி 110ன் கீழ் இணைத்து பேசிக் கொண்டு தூங்குகிறது என்பதுடன் பல கோடி ரூபாய் இன்வெஸ்ட் பண்ணி போஸ்டிங் தகுதியை பிடிக்க குழாயடி சண்டைபோட்டுக் கொண்டு தேர்தல் என்ற பெயரில் நாடகம் நடத்த்யிக் கொண்டு இருக்கிறார்கள்.

அத்துடன் முன்னரே கோலிவுட்டில் சந்தேகம் ஏற்பட்டது போல் பத்திரிகையாளர்கள் போர்வையில் இது போன்ற திருட்டுத்தந்த்தை அரங்கேற்றுகிறார்களோ என்ற சந்தேகம் வலுப் பெறுவதையும் பகிங்கரமாக சொல்லி இது குறித்து விரைவில் ஆதாரப்பூர்வமான தகவல்களை திரட்டி வருகிறோம் என்பதையும் சினிபிளஸ் வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
