
உலக மேடையில் தமிழ் படம் – ‘மேட் இன் கொரியா’ சாதனைக்கு நெட்ஃபிலிக்ஸ் கொண்டாட்டம்!
Netflix தளத்தில் வெளியாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம், ஆங்கிலம் அல்லாத உலகளாவிய டாப் 10 பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது. உரிமம் பெற்ற திரைப்படங்களும், நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் படங்களும் இணைந்த பட்டியலில் முதலிடம் பெற்ற ஒரே தென்னிந்தியத் திரைப்படமாக இது திகழ்வது குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனையை முன்னிட்டு நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சியில் நடிகர்கள் பிரியங்கா மோகன், ரிஷிகாந்த், இயக்குநர் கார்த்திக் மற்றும் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.
மேலும், நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் கண்டெண்ட் துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் தலைமையிலான குழுவும் இதில் கலந்து கொண்டு அணியின் வெற்றியை கொண்டாடியது.
தமிழ்நாட்டைத் தாண்டி சியோல் வரை விரியும் கதைப் பின்னணி, செண்பா என்ற கதாபாத்திரத்தின் உணர்ச்சி பூர்வமான பயணம், நடிகர்களின் இயல்பான நடிப்பு மற்றும் காட்சியமைப்பின் தரம் ஆகியவை இந்த படத்தை உலகளாவிய ரசிகர்களுடன் இணைத்துள்ளன.
சாதனையை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் ‘கொரியன் ஹார்ட்’ சின்னத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன.
‘மேட் இன் கொரியா’ வெற்றி, தமிழ் திரைப்படங்கள் உலகளாவிய தளங்களில் எட்டிக் கொண்டிருக்கும் புதிய உயரங்களை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது.

Tamil Film Shines Globally – Netflix Celebrates ‘Made in Korea’ Milestone!
film Made in Korea has achieved a remarkable milestone by securing the No.1 spot in the global Top 10 non-English films category. Notably, it is the only South Indian film to top both licensed and Netflix Original film categories simultaneously.
To celebrate this achievement, a special event was आयोजित with the presence of actors Priyanka Mohan, Rishikanth, director Karthik, and producer Srinidhi Sagar from Rise East Entertainment. They were joined by Netflix India’s Vice President of Content, Monika Shergill, along with the Netflix team to mark the occasion.
The film’s emotional narrative—tracing Senbhaga’s journey from Tamil Nadu to Seoul—along with compelling performances and visually rich storytelling, has resonated strongly with global audiences.
As part of the celebration, the team shared joyful moments by posing with the iconic Korean heart gesture, with the pictures quickly gaining traction on social media.
The success of Made in Korea once again highlights the growing global reach and recognition of Tamil cinema on international platforms.
