Saturday, April 18
Shadow

விஜய்யின் மெர்சல் படத்தை இணையதளங்களில் வெளிவிடுவோம் தமிழ் ராக்கர்ஸ்

உலக சினிமாவில் இன்று தமிழ் சினிமா ஓங்கி நின்றாலும் இன்று ஆங்கில படங்களுக்கு இணையாக படங்கள் வந்தாலும் இந்த தொழிலை இன்று ஒரு சிலர் நாசபடுத்தி வந்துகொண்டுதான் இருகிறார்கள். குறிப்பாக திருட்டு டி.வி.டி ஒருபக்கம் இன்னொரு பக்கம் கேபிள் டிவியில் திருட்டுதனமாக போடுவது இதுக்கு எல்லாம் அடித்தளம் யார் என்றால் ஒரு சில இணையத்தளம் படம் ரிலீஸ் ஆன முதல் காட்சி அப்பவே இணையதளங்களில் படத்தை வெளியிடுகின்றனர்.

இதனால் தமிழ் சினிமா மிகவும் நொடிந்து போகிறது என்பது தான் உண்மை இதனால் பல ஆயிரம் குடும்பங்கள் பிச்சை எடுக்கும் நிலைமைக்கு தள்ள போகிறார்கள் எங்கோ இருந்து கொண்டு பல கோடி செலவில் ஆயிரகணக்கான ஊழியர்கள் உழைப்பில் உருவாகும் படத்தை இணையதளங்களில் போடுவந்தால் எவ்வளவு நஷ்டம் அடுத்தவர்கள் உழைப்பையும் பணத்தையும் இப்படி திருடுவது நியாமா இதை தடுக்க நினைக்கும் விஷால் படத்தை பழி வாங்கும் இந்த இணையதளம் நீங்கள் விஷாலை பழிவாங்கவில்லை பல குடும்பங்களை பழிவாங்குகிறார்கள்.

இது வரை சின்ன படங்களை பழி வாங்கிய இந்த இணையதளங்கள் விஜயின் நூறுகோடிக்கும் மேல் செலவு செய்து எடுத்து இருக்கும் படம் மெர்சல் இதையும் இணையதளங்களில் வெளிவிடுவோம் என்று அறைகூவல் விட்டுள்ளனர். இதை எப்படி தடுக்கபோகிறார்கள் என்று தெரியவில்லை அப்படி நடந்தால் தயாரிப்பு நிறுவனம் என்ன ஆகும் சற்று யோசித்து இனியும் இந்த மட்டமான செயல்களை விட்டு சினிமாவையும் இதை நம்பி இருக்கும் பல ஆயிரம் குடும்பங்களை காப்பாற்ற யார் வருவார்களோ

Leave a Reply