Saturday, April 18
Shadow

தமிழகமெங்கும் “மகளிர் மட்டும் ” ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு பட்டு புடவை “

தமிழகமெங்கும் மகளிர் மட்டும் ” ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு பட்டு புடவை ” contest- ல் வெற்றிபெற்ற 3000 பெண்களுக்கு பட்டுபுடவை பரிசாக வழங்கப்பட்டது .

2D Entertainment தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மகளிர் மட்டும்…மகளிர் மட்டும் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பார்த்தவர்கள் அனைவரும் படத்தை பாராட்டி வருகிறார்கள்.

மகளிர் மட்டும் படக்குழுவினர் ” ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு பட்டு புடவை ” என்ற திட்டத்தை அறிவித்திருந்தனர். அதன்படி மகளிர் மட்டும் திரைப்படத்தை திரையரங்குகளில் காண வந்த பெண்களுக்கு பட்டு புடவை பரிசாக வழங்கப்பட்டது.. மகளிர் மட்டும் திரைப்படத்தை திரையரங்கில் காண வரும் பெண்களுக்கு முதல் மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு திரையரங்கிலும் ஒவ்வொரு காட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நபருக்கு பட்டுபுடவை பரிசாக வழங்கப்படுகிறது. இதுவரை தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் 3000 பெண்களுக்கு ( ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டு புடவை ) பட்டு புடவை பரிசாக வழங்கப்பட்டுள்ளது… ” ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு பட்டு புடவை ” Contest இன்றோடு நிறைவடைகிறது

Leave a Reply