
“டீசர் ஹிட்… ரிலீஸ் ரெடி!” ஜூலை 31ல் உலகம் முழுவதும் வெளியாகும் ‘சிக்மா’ – எதிர்பார்ப்பை எகிற வைத்த ஜேசன் சஞ்சய் அறிமுக படம்
தமிழ் சினிமாவில் சமீப காலமாக அதிகம் பேசப்படும் புதிய படங்களில் ஒன்றாக மாறியுள்ளது ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் உலகம் முழுவதும் வரும் ஜூலை 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
படம் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தை ஈர்த்த ‘சிக்மா’, தற்போது வெளியீட்டு தேதியால் மேலும் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, சமீபத்தில் வெளியான டீசர் 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த வெளியீட்டு அறிவிப்பை முன்னிட்டு லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவன தலைவர் ஜி.கே.எம். தமிழ்குமரன் கூறுகையில், “’சிக்மா’ திரைப்படம் மிகுந்த தரத்துடனும், ரசிகர்களை கவரும் வகையிலும் உருவாகியுள்ளது. இயக்குநர் ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தையே மிகுந்த தெளிவுடனும் அர்ப்பணிப்புடனும் கையாண்டுள்ளார். படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞரும், தொழில்நுட்பக் குழுவினரும் மிகுந்த உழைப்புடன் செயல்பட்டுள்ளனர். இந்தப் படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றார்.
இயக்குநர் ஜேசன் சஞ்சய் தனது அனுபவத்தை பகிர்ந்தபோது, “’சிக்மா’ என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பயணம். என் கதையை நம்பி முழு ஆதரவு அளித்த தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கு மனமார்ந்த நன்றி. இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் அர்ப்பணிப்பு என்னை மேலும் உற்சாகப்படுத்தியது. ஜூலை 31ஆம் தேதி ரசிகர்களிடம் படத்தை கொண்டு செல்ல ஆவலாக காத்திருக்கிறோம். விரைவில் மேலும் பல அப்டேட்கள் வெளியாகும்” என்று தெரிவித்தார்.
இந்தப் படத்தில் சந்தீப் கிஷனுடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோகி ஜாபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு தமன் எஸ் இசையமைத்துள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், பிரவீன் கே.எல் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ஹரிஹரசுதன் விஎஃப்எக்ஸ் மேற்பார்வையை மேற்கொண்டுள்ளார். படத்தின் ஆடியோ உரிமையை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளதுடன், டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
மேலும், படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

“Teaser Creates Buzz… ‘Sigma’ Locks July 31 Release!” Jason Sanjay’s Directorial Debut Starring Sundeep Kishan Set for Worldwide Release
Among the most talked-about upcoming Tamil films in recent times, Sigma has quickly emerged as one of the most anticipated projects. Produced by Lyca Productions and marking the directorial debut of Jason Sanjay, the film stars Sundeep Kishan in the lead role. The makers have now officially announced that the film will hit theatres worldwide on July 31.
Ever since its announcement, Sigma has generated strong curiosity among fans and the film industry alike. The recently released teaser further amplified the excitement, crossing over 20 million views and trending widely across social media platforms, raising expectations for the film even higher.
Speaking about the release announcement, G.K.M. Tamil Kumaran, Head of Lyca Productions, said, “We are delighted to officially announce July 31 as the release date of Sigma. The film has shaped up exceptionally well and we believe it will offer audiences a memorable theatrical experience. Jason Sanjay has approached his debut film with remarkable clarity and dedication. Every artist and technician associated with the project has contributed with complete commitment, and we are excited to present Sigma to audiences worldwide.”
Director Jason Sanjay shared, “Sigma has been a very special and unforgettable journey for me. My heartfelt thanks to producer Subaskaran and Lyca Productions for believing in my story and supporting my vision throughout. Working with such a dedicated cast and crew has been an incredible experience. We are eagerly looking forward to bringing Sigma to audiences on July 31, and more exciting updates about the film will be revealed soon.”
The film features Sundeep Kishan in the lead role alongside Faria Abdullah, Raju Sundaram, Sampath Raj, Shiv Panditt, Anbu Thasan, and Yogi Babu in pivotal roles.
The technical crew includes music composed by Thaman S, cinematography by Krishnan Vasant, editing by Praveen K.L., and VFX supervision by Harihara Suthan. The audio rights of the film have been acquired by Saregama, while Netflix has secured the digital streaming rights.
The makers have also confirmed that announcements regarding the film’s trailer launch and audio release will be unveiled soon.
