Wednesday, October 28
Shadow

தல 59 படத்தின் அஜித்துக்கு ஜோடி யார் தெரியுமா பிரபல ஹிந்தி நாயகி

விஸ்வாசம் படத்தை அடுத்து எச்.வினோ இயக்கும் படத்தில் நடிக்கிறார் அஜித். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் சமீபத்தில் தொடங்கியது. இது நாம் அறிந்த விஷயம் அதோடு இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடிக்கிறார்கள் அதுவும் நாம் அறிந்த விஷயம் இது யார் என்ற பட்டியலும் நாம் அறிவித்தோம்.

ஆனால் தலையின் ஜோடி யார் என்று யாரும் அறியாமல் இருந்த விஷயம் இப்போது கசிந்துள்ளது. இந்தியில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம். இந்த படத்தில் அமிதாப் பச்சன் நடித்த பாத்திரத்தில் தான் அஜித் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறார்.

ஆனால் இந்த தகவலை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை.#thala59 #ajith #vinoth #kalyani #nazizriya #sharddhasrinath #vidhyabalan #yuvanshankarraja