Thursday, September 23
Shadow

தலைவி திரை விமர்சனம் (Rank 3.5/5)

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், அரவிந்தசாமி, சமுத்திரக்கனி உள்பட பலர் நடிப்பில் ஏஎல் விஜய் இயக்கத்தில், ஜீவி பிரகாஷ் இசையில் உருவாக்கியுள தலைவி திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.

எம்ஜிஆர் என்னும் மாபெரும் வசீகரமான தலைவர், அவரது கட்சிக்காக உழைக்க முன் வரும் ஜெயலலிதா, ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட அவமானங்கள், அரசியலில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் ஆகியவைகளை மிக அழகாக இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்று சொல்ல வேண்டுமானால் சரியான கேரக்டருக்கு சரியான நடிகர்களை தேர்வு செய்து தான். குறிப்பாக ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத் எப்படி பொருந்துவார் என்று படம் ஆரம்பிக்கும் போது கேள்வி கேட்டு அனைவரின் வாயை அடைத்து உள்ளார் ஏ.எல்.விஜய். அதேபோல் அச்சு அசலாக எம்ஜிஆர் ஆகவே மாறிவிட்ட அரவிந்தசாமி, சசிகலா கேரக்டருக்கு பூர்ணா, கருணாநிதி கேரக்டருக்கு நாசர், எம்ஆர் ராதா கேரக்டருக்கு ராதாரவி, ஆர் எம் வீரப்பன் கேரக்டருக்கு சமுத்திரகனி என சரியான நடிகர்களை தேர்வு செய்து பாதி வெற்றி ஏ.எல்விஜய் பெற்றுவிட்டார்.

மிகத் துணிச்சலான வசனங்கள், கொஞ்சம் கூட தொய்வில்லாத திரைக்கதை ஆகியவை இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ். ஜெயலலிதா என்னும் இரும்பு மனுஷி எடுத்த துணிவான முடிவுகள், சந்தித்த அவமானங்கள், அவமானங்களை எதிர்கொண்ட விதம், தேர்தல் வெற்றிகள், தேர்தல் தோல்விகள் ஆகியவை மிக அழகாக இந்த படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வசனங்கள் குறைவாகவும் விஷுவல் காட்சிகள் அதிகமாகும் இருப்பது இயக்குனரின் திறமையை வெளிப்படுத்துகிறது.

படத்தின் ஆரம்பத்தில் ஜெயலலிதா சட்டசபையில் அவமானப்படும் காட்சிகளிலிருந்து ஆரம்பித்து, மீண்டும் இந்த சட்டசபைக்கு முதல்வராக தான் வருவேன் என சபதம் எடுப்பது, அந்த சபதத்தை அப்படியே கிளைமாக்ஸ் காட்சிகளில் இணைப்பது மிகச் சிறந்த திரைக்கதைக்கு எடுத்துக்காட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

எம்ஆர் ராதா துப்பாக்கி சூடு, இந்திரா காந்தியின் மறைவு, ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு, எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாள் முதல்வராக செய்யும் முயற்சி, ஆட்சி கவிழ்ப்பு, பாராளுமன்றத்தில் கம்பீரமாக ஆங்கிலத்தில் பேசும் திறமை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் செய்த தியாகங்கள் என ஜெயலலிதாவின் ஒவ்வொரு வாழ்க்கையின் அங்கங்களையும் மிகச்சரியாக ஏ.எல்விஜய் பதிவு செய்துள்ளார்

படத்தின் பிளஸ்:

திரைக்கதை, கேரக்டர் தேர்வு மற்றும் வசனங்கள், பாடல்கள், ஜிவி பிரகாஷின் பின்னணி இசை

படத்தின் மைன்ஸ்:

சிவாஜி கணேசன் கதாபாத்திரத்துக்கு ஏனோ ஒரு பொருந்தாத நபரை தேர்வு செய்திருப்பது

மொத்தத்தில் அனைவரும் பார்க்க வேண்டிய படம் தலைவி.

CLOSE
CLOSE