விஜய்க்கு ஜோடியாக இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். மேலும், அவர்களுடன் இணைந்து கதிர், விவேக், இந்துஜா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
விஜய்க்கு ஜோடியாக இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். மேலும், அவர்களுடன் இணைந்து கதிர், விவேக், இந்துஜா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இயக்குனர் அட்லி இயக்கத்தில் பெயர் சூட்டப்படாமல், விஜயின் 63வது படம் என்பதால் ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வந்தது இந்த புதிய படம். பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகின்ற திரைப்படம் என்று கதை குறித்து சினிமா வட்டாரங்கள் கூறிவரும் நிலையில், இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், விஜயின் 63 வது திரைப்படமாக வெளியாகவிருக்கும் இதற்கு ’பிகில்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், பர்ஸ்ட் லுக்கில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதும் உறுதியாகியுள்ளது.