

தளபதி விஜய் நடிப்பில் நாம் அனைவரும் மிகவும் எதிர்பார்க்கும் படம் பிகில் இந்த படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பதும் நாம் அறிந்த விஷயம் இந்த நிலையில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் பூஜை இன்று கோலாகலமாக துவங்கியது
மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தளபதி 64.
விறுவிறுப்பான திரில்லர் கதையைக் கொண்டு உருவாகவுள்ள இந்த திரைப்படத்தை குறைந்த நாட்களில் படமாக்கி வெளியிட படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்
படத்தில் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், நடிகர் சாந்தனு, நடிகை மாலவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. விரைவில் படபிடிப்பு ஆரம்பம் ஆகிறது
