Friday, October 4
Shadow

தளபதி விஜய் போல தங்க மனசு யாருக்கும் இல்லை பிரபல தயாரிப்பாளர் புகழ்

தமிழ்சினிமாவின் மூன்றாவது முறையாக இணையும் விஜய் மற்றும் இயக்குனர் அட்லி ஜோடி இந்த ஜோடி மாபெரும்வெற்றி வெற்றி கூட்டணி அதோடு வசூலில் சாதனை படைக்கும் ஜோடியும் இந்த ஜோடி தமிழ் சினிமாவில் மிக பிரமாண்ட தயாரிப்பாளர் அதோடு சிறந்த படங்களை தயாரிக்கும் நிறுவனமான ஏ.ஜி.எஸ். நிறுவனத்துடன் முதல் முறையாக இணைந்து மிகவும் பிரமாண்ட முறையில் தயாரித்து இருக்கும் படம் தான் பிகில்.

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் முதல் பார்வை போஸ்டர்ஸ் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது இதன் மூலம் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலும் எதிர்பார்புகளின் அதிகரிப்பை உண்டுபண்ணியுள்ளது. ஒரு வழியாக இந்த படத்தின் படபிடிப்பு முடிவடைந்தது. படபிடிப்பின் கடைசிநாள் ஆண்டு இந்தபடத்தில் பனி புரிந்த அனைவருக்கும் தளபதி இன்ப அதிர்ச்சி கொடுத்து எல்லோரையும் திக்குமுக்காட வைத்துள்ளார் ஆம் இறுதி நாள் அன்று இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் பிகில் என்று முத்திர பதித்த மோதிரம் பரிசு கொடுத்து மகிழ்ந்துள்ளார். இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாக முமுமுரமாக வேலைகள் நடந்து வருகிறது.

இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தளபதி விஜய் அவர்களை மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார் நாங்கள் எத்தனையோ படம் தயாரித்துள்ளோம் எத்தனையோ ஹீரோகளுடன் பணிபுரிந்து உள்ளோம் ஆனால் விஜய் போல ஒரு சிறந்த மனிதரை நாங்கள் பார்த்தது இல்லை என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

மேலும் பிகில் படத்தில் தினமும் 400-க்கும் அதிகமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் தங்க மோதிரம் வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் தளபதி விஜய். அவருடைய மனது தங்கம் போன்றது. தளபதி தான் பெஸ்ட் என்றும் கூறியுள்ளார்.