முனி ரத்னா எழுதி தயாரித்துள்ள குருக்ஷேத்ரம் படத்தினை இயக்குனர் நாகன்னா இயக்கியுள்ளார் . இப்படத்தை தமிழில் கலைப்புலி S தாணு வெளியிடும் பிரமாண்ட படைப்பு ஆகும் . இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது .
பத்திரிக்கையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் முனிரத்னா அவர்கள் பேசியவை
இயக்குனர் நாகன்னா பேசியவை ” படம் முனிரத்னா அவர்களின் மூலம் எடுக்கப்பட்டது , அந்த வகையில் நாங்கள் துரியோதனின் கதையை மையமாக வைத்து எடுத்திருக்கிறோம். 3டி படம் எடுக்க காரணமும் முனிரத்னா அவர்கள்தான் . இந்தப் படத்தில் தர்ஷன் மிகவும் பலம் வாய்ந்தவர் போல் காண்பிப்பதற்காக அவர் 35 கிலோ எடையை வைத்து நடிக்க வேண்டியிருந்தது. அந்த அளவிற்கு நடிகர்களின் மேல் காயம் விழும் அளவிற்கு நடிகர்கள் நடித்தனர். இந்தப் படத்தில் கர்ணன் துரியோதனின் நட்பு பலமாக பேசப்பட்டிருக்கிறது. இந்த படத்தினை பார்க்கும் உங்கள் கண்களில் தண்ணீர் வரவில்லை என்றாலும் தண்ணீர் தேங்கும் என்பது உறுதி”.இவ்வாறு அவர் பேசினார் .
கலைப்புலி s தாணு அவர்கள் பேசியவை , “1985ல் நான் தயாரித்த முதல் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களை நடிக்க வைத்தேன்.இப்படத்தில் அவரது நடிப்பு அற்புதமாக வந்துள்ளது .காதல், நட்பு, சகிப்புத்தன்மை என அனைத்தும் இப்படத்தில் அடங்கியுள்ளது . கர்ணன் என்றால் நினைவிற்கு வருவது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படம் ‘கர்ணன்’ தான். அர்ஜூன் அவர்கள் அந்த அளவிற்கு நடித்திருக்கிறார். இயக்குனர் நாகன்னா பிரமாண்டமாக இயக்கி அதிக பொருட்செலவில் முனிரத்னா அவர்கள் தயாரித்த இப்படத்தை தமிழ் வெளியிடுவது மகிச்சியளிக்கிறது . படம் நிச்சயம் மாபெரும் வெற்றி அடையும் ” இவ்வாறு அவர் பேசினார் .
நடிகர் தர்ஷன் பேசியவை , ” நான் சென்னையில் உள்ள அடையாரில்தான் படித்தேன், நான் லைட் பாய் ஆக தான் வேலைக்கு சேர்ந்தேன். மைதலாஜிகள் படத்தினை தைரியமாக தயாரிப்பாளர் கொண்டு வந்தால் அவரை ஊக்குவிக்க வேண்டும்.அந்த வகையில் நான் இப்படத்தை தேர்வு செய்தேன் .இந்தப் படத்தில் நாங்கள் நடித்தாலும் படத்தின் ஹீரோ முனிரத்னா தான். அவரின் பங்களிப்பே இப்படம் வெற்றியடைந்ததிற்கு காரணம் .இது போன்ற படங்கள் செய்வதற்கு முன்பு நிறைய பயிற்சி வேண்டும். அந்த அளவிற்கு படத்தில் நடித்துள்ளோம். வில்லன் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தியவர் அர்ஜுன் அவர்கள், அவரின் நடிப்பும் திறமையும் தனித்துவமானது. இந்தப் படத்தில் பல தரப்பட்ட கலைஞர்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் 3டி 2டி என இரண்டு முறை நடித்து மற்றும் டப்பிங் செய்துள்ளோம்” இவ்வாறு அவர் பேசினார் .
நாகன்னா இயக்கியிருக்கும் இந்த மகாபாரத இதிகாசம் உருவாக முக்கிய காரணம் இருந்தவர்கள் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள். இந்தப் படத்தில் பீஷ்மராக அம்பிரிஷ், துரியோதனன் ஆக தர்ஷன்,கர்ணன் ஆக அர்ஜுன் சார்ஜா, பீஷ்மர் ஆக அம்பரீஷ்,கிருஷ்ணர் ஆக வி. ரவிச்சந்தர், அர்ஜுனன் ஆக சோனு சூட், சகுனி ஆக ரவி ஷங்கர், சையியா ஆக ராக்லைன் வெங்கடேஷ்,திரௌபதி ஆக ஸ்நேகா என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளார்கள் . இந்த மாபெரும் இதிகாசத் திரைப்படத்திற்கு ஹரி கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.
ஐெய் வின்சென்ட் ஒளிப்பதிவும், ஜோ. நி. ஹர்ஷா எடிட்டிங்கும் கையாண்டுள்ளனர்.பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை முனி ரத்னா எழுதி தயாரித்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது .