C.M.வர்கீஸ் தயாரிப்பில் பாலமுருகன் இயக்கத்தில், வெற்றி, சௌந்தர்ராஜன், அதிதி கிருஷ்ணா, ஆடுகளம் நரேன், நான்கடவுள் ராஜேந்திரன் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள “ தங்கரதம் “ படத்தின் டிரெய்லரை இன்று நடிகர் ஆர்யா வெளியிட்டார்.
படத்தின் பாடல்களையும், டிரெய்லரையும் பார்த்து ரசித்த ஆர்யா படக் குழுவினரை வெகுவாகப் பாராட்டினார்.
விழாவில் படத்தின் தயாரிப்பளார் C.M.வர்கீஸ், இயக்குனர் பாலமுருகன், இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ, நாயகன் வெற்றி, நடிகர் சௌந்தர்ராஜன் தயாரிப்பு நிர்வாகி பினுராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.