Sunday, April 19
Shadow

A.R. முருகதாஸ் விஜய்க்கு கொடுக்கும் இன்ப அதிர்ச்சி

தமிழ் சினிமாவுக்கு விஜய் வந்து பல வருடங்கள் ஆனாலும் பல இயக்குனர்களுடன் இணைந்தாலும் அவருக்கு மிக பெரிய அங்கிகாரம் வாங்கி கொடுத்த இயக்குனர் என்றால் அது A.R. முருகதாஸ் தான் என்று சொன்னால் அது மிகையாகது அதற்கு பிறகு அட்லி என்று சொல்லலாம் மீண்டும் எப்போ விஜய் மற்றும் A.R. முருகதாஸ் இணைவார்கள் என்று எதிர்பார்த்த நாம் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி செய்தி தான் இது

விஜய் கேரியரில் பெரும் திருப்புமுனையை கொண்டுவந்த படங்கள் துப்பாக்கி, கத்தி. இந்த இரண்டு படங்களையுமே இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ்தான். இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணையவேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் அண்மையில் இவர்கள் இருவரும் சந்தித்து மீண்டும் ஒரு படம் செய்வது குறித்து பேசியதாக தகவல் கசிந்துள்ளது. இப்படத்தை கத்தி படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்துடன் இணைந்து முருகதாஸும் தயாரிப்பார் என கூறப்படுகிறது. மேலும் லிங்கா படத்தில் நடித்த பாலிவுட் நாயகி சோனாக்ஷி சின்ஹா இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பார் எனவும் தகவல் கசிந்துள்ளது.

Leave a Reply