Wednesday, October 28
Shadow

தி லைன் கிங் திரை விமர்சனம்

டிஸ்னி தயாரிப்பில், ஜான் ஃபேவரூ இயக்கத்தில் வெளி வந்துள்ளதுடன் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் பிடித்த படம், `தி லயன் கிங்’. `டிமோன் அண்ட் பும்பா’ கார்டூனில் இடம்பெறும் சிங்கத்தை மையமாக வைத்து வெளிவரும் படம்தான் `தி லயன் கிங்’.

இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான `தி லயன் கிங்’ படத்தின் டிரெய்லர், யூடியூ-பில் இதுவரை 36 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதில் இடம்பெறும் சிம்பா, முஃபாஸா, நலா, ஸ்கார், டிமோன், பும்பா, சாரபி போன்ற சில முக்கியமான கதாபாத்திரங்களுக்கு

இந்தி வெர்ஷனில் ஷாருக்கானும் அவரின் மகனான ஆர்யன் கானும் டப்பிங் பேசியுள்ளனர். தமிழ் வெர்ஷனில் சித்தார்த், அரவிந்த் சுவாமி, ரோபோ சங்கர், ஐஷ்வர்யா ராஜேஷ் போன்றவர்களும், தெலுங்கில் நானியும் டப்பிங் பேசியுள்ளனர்.

ஷாகதி, டொனால்ட் க்ளோவர், பாடகி பியான்ஸ் நோல்ஸ், ஆஸ்கர் நாயகி ஆல்ஃபர், செத் ரோகன், பில்லி எய்ச்னர் போன்ற முக்கிய நடிகர்கள் இதில் பணியாற்றியிருக்கின்றனர். மேலும், `பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’, `ஷெர்லாக் ஹோம்ஸ்’, `இன்டெஸ்டெல்லார்’, `இன்சப்ஷன்’ போன்ற முக்கியமான படங்களுக்கு இசையமைத்த ஹான்ஸ் ஜிம்மர், இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.


ஒவ்வொரு முறையும் புதிய ஸ்கிர்ப்ட் மற்றும் ஐடியாகளை கொண்டு வந்து ரசிகர்களை கவர்ந்து வரும் டிஸ்னி நிறுவனம், தற்போது தி லைன் கிங் படத்தை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான 1994 படத்தை போன்று இருக்கும் இந்த படம் புதிய வடிவில் மிருகங்களின் பரிமாணத்தை பேசும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதையை இங்கே பார்க்கலாம்,

ஆப்பிரிக்க காட்டில் வசிக்கும் அரசன் முபாசா என்ற சிங்கத்திற்கு சிம்பா என்ற குழந்தை பிறக்கிறது. தொடர்ந்து அரசர் சிம்பாவை தனது வாரிசாக அறிவிக்கிறார். இந்தநிலையில், முசாபாவின் சகோதரர் ஆட்சியை தனதாக்கி கொள்ள திட்டமிடுகிறார். இதை தொடர்ந்து நடக்கும் சதி வேலைகள், சண்டைகள், மன்னிப்பு, வருத்தம், போன்றவைகளுடன் சிம்பா எப்படி ஆட்சியை கைப்பற்றி வெற்றி கண்டது என்பதே படத்தின் மீதி கதை.

படத்தின் பிளஸ்: 3D எபெக்ட், விசுவல் எபெக்ட்கள், கிராபிக்ஸ்

படத்தின் மைனஸ்: மிகவும் பழைய வாரிசு அரசாளும் கதை.

மொத்தத்தில் குழந்தைகள் உள்பட அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.