Saturday, June 6
Shadow

“எல்லம்மா’ படத்தின் வேர்கள் என் சொந்த மண்ணில்தான்” – வேதுருபாகா கிராம நினைவுகளில் நெகிழ்ந்த தேவி ஸ்ரீ பிரசாத்!

“எல்லம்மா’ படத்தின் வேர்கள் என் சொந்த மண்ணில்தான்” – வேதுருபாகா கிராம நினைவுகளில் நெகிழ்ந்த தேவி ஸ்ரீ பிரசாத்!

இசையமைப்பாளராக இந்திய திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத், தற்போது நடிகராக அறிமுகமாகும் ‘எல்லம்மா’ திரைப்படத்தின் மூலம் புதிய பரிமாணத்தில் ரசிகர்களை சந்திக்கத் தயாராகி வருகிறார். அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம், தற்போது அதன் பின்னணிக் கதைகளால் மேலும் கவனம் ஈர்த்து வருகிறது.

சமீபத்தில் தனது பூர்வீக கிராமமான வேதுருபாகாவிற்கு சென்ற தேவி ஸ்ரீ பிரசாத், அங்கு நடைபெற்ற பாரம்பரிய ஜாத்தாரா திருவிழாவில் கலந்துகொண்டு, கிராம மக்களுடன் நேரம் செலவிட்டார். தனது முன்னோர்கள் வாழ்ந்த வீட்டில் தங்கி, கிராமத்தின் இயற்கை, பண்பாடு, நாட்டுப்புற கலை மற்றும் ஆன்மிக உணர்வுகளை மீண்டும் அனுபவித்த அவர், அந்த அனுபவங்களை உணர்ச்சிபூர்வமான வீடியோவாக சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் பேசிய அவர், “என் அப்பா பிறந்த ஊர் வேதுருபாகா. சிறுவயதில் சென்னையிலிருந்து எங்களை அடிக்கடி இங்கு அழைத்து வந்து, இந்த மண்ணின் இயற்கை அழகையும் மனிதர்களின் அன்பையும் உணர வைத்தார்கள். நம் கலாச்சாரத்துடன் நம்மை இணைத்து வைத்திருக்கும் இந்த மண்ணே ‘எல்லம்மா’ படத்தில் நடிக்க என்னை ஈர்த்த முக்கிய காரணம்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், கிராம வாழ்க்கையின் இயல்பும், நாட்டுப்புற கலையின் ஆன்மாவும், தெய்வீக உணர்வுகளும் ‘எல்லம்மா’ திரைப்படத்தின் மையமாக இருக்கும் என்பதையும் அவரது வருகை வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பெரும் தயாரிப்பாளர் தில்ராஜு வழங்கும் இந்தப் படத்தை இயக்குநர் வேணு யெல்தண்டி இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சிரீஷ் தயாரிக்கும் ‘எல்லம்மா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது.

தேவி ஸ்ரீ பிரசாதின் சொந்த மண் நினைவுகளும், கிராமத்து கலாச்சாரத்தின் நெஞ்சைத் தொடும் உணர்வுகளும் இணைந்துள்ள ‘எல்லம்மா’, வெறும் திரைப்படமாக அல்லாமல் மண்ணின் மணத்தை கொண்டாடும் படைப்பாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

“The Roots of ‘Ellamma’ Are Deeply Connected to My Native Soil” – Devi Sri Prasad Gets Emotional Recalling Memories of Vedurupaka Village!

Rockstar Devi Sri Prasad, who has carved a unique identity for himself in Indian cinema as a celebrated music composer, is now all set to step into a new dimension as an actor with his upcoming film ‘Ellamma’. Ever since the project was announced, the film has generated immense curiosity among fans, and now the emotional stories behind its making are drawing even greater attention.

Recently, Devi Sri Prasad visited his ancestral village Vedurupaka, where he participated in the traditional Jathara festival celebrations and spent quality time with the villagers. Staying at his ancestral home, he revisited the village’s natural beauty, culture, folk traditions, and spiritual atmosphere. The composer-turned-actor also shared an emotional video on social media capturing his experiences and cherished memories from the visit.

Speaking in the video, Devi Sri Prasad said, “Vedurupaka is the village where my father was born. During our childhood, we were often brought here from Chennai so that we could experience the beauty of nature and the warmth of our people. This land, which keeps us connected to our culture and roots, is the very reason that made me say yes to ‘Ellamma’.”

Fans have been appreciating how his visit beautifully reflects the soul of ‘Ellamma’, a film that is expected to celebrate rural life, folk art, spirituality, and emotional human connections at its core.

Presented by Dil Raju, the film is directed by Venu Yeldandi and produced by Shirish under the banner of Sri Venkateswara Creations. ‘Ellamma’ is being made as a multilingual project in Tamil, Telugu, Hindi, Malayalam, and Kannada.

Blending the emotions of one’s roots with the essence of rural culture, ‘Ellamma’ is shaping up to be much more than just a film — it promises to be a heartfelt celebration of tradition, heritage, and the fragrance of native soil.