
தீபாவளி ரேஸில் அதிரடி காட்டும் சிலம்பரசன் TR! ‘அரசன்’ படத்திற்காக வடசென்னை செட் அமைத்து மாஸ் தயாரிப்பு
தமிழ் திரையுலகில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் படங்களில் ஒன்றாக சிலம்பரசன் TR நடிக்கும் ‘அரசன்’ திரைப்படம் மாறியுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வேகத்தில் நடைபெற்று வருவதுடன், படத்தை எதிர்வரும் தீபாவளி வெளியீட்டிற்காக தயாரிப்பு நிறுவனம் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்தில் சிலம்பரசன் TR உடன் பிரியங்கா மோகன், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். வெற்றிமாறனின் ‘வடசென்னை’ உலகத்தை விரிவுபடுத்தும் விதமாக புதிய கதாபாத்திரங்களுடன் உருவாகும் இந்த திரைப்படம், முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் உணர்ச்சி கலந்த கமெர்ஷியல் படமாக உருவாகி வருகிறது.
படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்ற நிலையில், தற்போது சென்னை நகரில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சிலம்பரசன் TR, பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா மற்றும் கிஷோர் ஆகியோர் தொடர்பான முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள கிராமப்புற பகுதியில் மிகப்பெரிய திறந்தவெளி அரங்கம் அமைக்கப்பட்டிருப்பதும் கவனம் ஈர்த்துள்ளது. வடசென்னையின் சூழலை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் இந்த செட் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘காலா’ திரைப்படத்திற்காக அமைக்கப்பட்ட ‘தாராவி’ செட்டைவிட கூடுதல் நுணுக்கத்துடனும் பிரம்மாண்டத்துடனும் இந்த அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவை நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி இணைய உள்ளதாகவும், ‘வடசென்னை’ படத்தில் இடம்பெற்ற ராஜன் மற்றும் சந்திரா கதாபாத்திரங்களின் தொடர்ச்சியும் இப்படத்தில் காணப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இன்னும் மூன்று மாதங்களுக்குள் முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ள படக்குழு, தீபாவளி வெளியீட்டை குறிவைத்து பணிகளை முன்னெடுத்து வருகிறது. அண்மையில் வெளியான பிரத்யேக புரோமோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், ‘அரசன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
பிரம்மாண்ட தயாரிப்பு, வெற்றிமாறன் – சிலம்பரசன் கூட்டணி, வடசென்னை பின்னணி மற்றும் தீபாவளி வெளியீடு என பல அம்சங்கள் ஒன்றாக இணைந்துள்ளதால், ‘அரசன்’ திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வணிக வெற்றிப் படங்களில் ஒன்றாக அமையும் என்ற நம்பிக்கை திரையுலக வட்டாரங்களில் நிலவி வருகிறது.

Simbu’s ‘Arasan’ Gears Up for a Grand Diwali Release with Massive North Chennai Set
One of the most anticipated projects in Tamil cinema right now is ‘Arasan’, starring in the lead role. Directed by , the film is progressing at a brisk pace, with the makers actively preparing for a worldwide theatrical release during the upcoming Diwali festival season.
Produced by under producer , the film features an ensemble cast including , , , , and in pivotal roles. Expanding the universe of Vetrimaaran’s acclaimed , the film is said to be a high-octane commercial entertainer packed with action and intense emotions.
The first schedule of shooting was completed in Kovilpatti, while the second schedule is currently nearing completion in Chennai. Important scenes involving Silambarasan TR, Priyanka Mohan, Samuthirakani, Andrea, and Kishore are reportedly being filmed in this phase.
For the next shooting schedule, the makers have constructed a massive open-air set in a village area along the East Coast Road near Chennai. The set has reportedly recreated the atmosphere of North Chennai in a highly realistic manner. Sources close to the team claim that the set has been designed on a scale even grander and more detailed than the famous Dharavi set created for starring .
Adding to the excitement, is expected to join the third schedule of filming in the role of a police officer. Reports also suggest that the characters Rajan and Chandra from Vada Chennai, played by Ameer and Andrea respectively, could have a continuation in this film.
The team is planning to wrap up the entire shoot within the next three months, aiming firmly for a Diwali release. A recently released special promo has already generated huge buzz among fans and industry insiders, significantly increasing expectations for the film.
With its massive production scale, the powerful combination of Vetrimaaran and Silambarasan TR, the North Chennai backdrop, and a festive Diwali release window, ‘Arasan’ is widely expected to emerge as one of the biggest commercial entertainers of the year.
