
GST இந்தியாவையே புரட்டி போட்டுவிட்டது என்று தான் சொல்லணும் எல்லா தொழில்களும் இன்று பெரும் நஷ்டத்தை அடைந்துள்ளது பல தொழில்கள் தொடர முடியுமா என்ற கேள்வி குறியும் எழுந்துள்ளது. அதோடு பல கோடி நஷ்டங்கள் அடைந்து வருகின்றனர். பிறமாநிலங்களில் அந்த அந்த முதல்வர்கள் முடிந்த வரை மக்களுக்கும் தொழில் புரிபவர்களுக்கும் வரி சுமை தன் மாநிலம் ஏற்று கொள்ளும் என்ற கூறி செயல்பட்டுள்ளார்கள். ஆனால் தமிழக அரசு மோடியின் கைகூலிகள் எதை பற்றியும் கவலைபடாமல் இதன் மூலம் வேறு எப்படி எல்லாம் சம்பாதிக்கலாம் என்று திட்டம் போடுகிறார்கள் குறிப்பாக தமிழ் சினிமாகாரர்கள் பெரும் அவஸ்தை படுகிறார்கள் தமிழக அரசுயிடம் பேசிய பேச்சு வார்த்தைகள் தோல்வி இதனால் கடந்த இரண்டு நாட்ககளாக திரையரங்கம் செயல் படவில்லை இதனால் எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா?
GST-யை எதிர்த்து நேற்று முதல் காலவரையின்றி தியேட்டர்கள் மூடப்படுவதாக அறிவித்தார் தியேட்டர் உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ரங்கநாதன்.
இதனால் நேற்று முதல் தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்த வேலை நிறுத்தத்தால் நேற்று ஒரு நாள் மட்டும் சுமார் ரூ 15 கோடி வரை தமிழகம் முழுவதும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சங்க நிர்வாகி ஒருவர் தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசுடன் நேற்று ஏற்பட்ட பேச்சு வார்த்தையும் தோலிவி அடைந்ததால் இன்னும் தியேட்டர்கள் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் ஏற்படும் நஷ்டம் இன்னும் பல மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.