
விஜய் தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர் மட்டும் இல்லை மனித கட்சி என்று ஒரு கட்சி நடத்தும் தலைவரும் தான் சமீபகாலமாக இவரின் அரசியல் பங்கு அதிகமாக தான் இருக்கிறது என்று தான் சொல்லணும் விவசாயிகளுக்கு குரல் கொடுப்பது பண தட்டுபாடு சமயமும் குரல் கொடுத்தார். மனித கட்சி ஆரம்பித்தவுடன் அன்று இருந்த முதல்வர் ஜெயலலிதாவால் மிகவும் பழிவாங்கப்பட்டார் தலைவா படத்தில் ஆரம்பித்து கடைசியாக வெளியான பைரவா படம் வரை இருந்து அவரின் அரசியல் ஆசை விடவில்லை இப்போது முதல் முறையாக அரசியல்வாதியாக நடிக்கிறார் என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது .
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘மெர்சல்’. அப்பா – இரு மகன்கள் என மூன்று வேடங்களில் விஜய் நடிக்கும் இந்தப் படத்தில், அப்பா விஜய் பண்ணையாராகவும், ஒரு மகன் டாக்டராகவும், இன்னொரு மகன் மேஜிக் நிபுணராகவும் நடிப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால், அவர் அரசியல்வாதியாக நடித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியான ‘மெர்சல்’ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தில், அட்லீக்குப் பின்னால் உள்ள போஸ்டரில், மைக் முன்பு விஜய் பேசுவது போல உள்ளது. அத்துடன், அவருக்கு அருகில் இரண்டு கொடிகளும் பறக்கின்றன. அதில் ஒன்று, இந்திய தேசியக்கொடி. இன்னொன்று, கட்சிக்கொடி போல உள்ளது. போஸ்டரில் மொட்டை ராஜேந்திரனும் இடம்பெற்றிருப்பதால், அரசியல்வாதியாகவும் விஜய் நடித்திருக்கலாம் என்கிறார்கள்.