சேரன் பல ஆண்டுகளுக்குப் பின்னர் இயக்கி இருக்கும் குடும்பப் படம் திருமணம்.

திருமணம் படத்தில் உமாபதி, காவ்யா சுரேஷ், சுகன்யா, சேரன்,தம்பி ராமையா, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர்,பாலசரவணன்,சீமாஜி நாயர், மற்றும் பலர் நடிப்பில் ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவில் சேரன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் திருமணம்

இன்று எல்லோரும் திருமணம் என்றால் அதை ஆடம்பரமாகதான் பார்கிறார்கள் அதற்காக தேவையில்லாமல் பல கோடிகள் செலவு செய்கிறார்கள். இது evவளவு தவறு என்பதை மிகவும் நேர்த்தியாக சொல்லி இருக்கும் படம்

திருமணம் கதையாக பார்த்தால் மிகவும் எளிமையான கதை தான், சேரன் ஒரு நேர்மையான அரசு அதிகாரி. அவருடைய தங்கச்சி காவ்யா சுரேஷ், FM-ல் வேலைப்பார்க்கும் உமாபதியை காதலிக்கின்றார்.

அவர்கள் காதலுக்கு இரு வீட்டிலும் பிரச்சனை இல்லை என்றாலும், மாப்பிள்ளை வீட்டார் மிகவும் ஆடம்பரமானவர்கள். பெண் வீட்டார் மிடிக் க்ளாஸ் பேமிலி.

இந்த இரண்டு துருவங்கள் எப்படி இணைந்தனர், இந்த திருமணம் நன்றாக நடந்ததா, திருமண நிகழ்வுகளில் நடக்கும் கூத்துக்கள் என்பதை கண்முன் வெட்ட வெளிச்சமாக காட்டுவதே இந்த திருமணம்.

சில வருடங்களுக்கு முன்னர் ஆர். எஸ். பிரசன்னா இயக்கத்தில் வெளியாக கல்யாண சமையல் சாதம் படத்தின் சாயலில் உள்ளது திருமணம். கலப்பு செண்டிமெண்ட் கலந்த கலவையுடன் திருமணத்தின் உண்மையை சொல்லி இருக்கிறார்.

திடீர் திருப்பம் என ஒன்றுமே இல்லை. எல்லாரும் எளிதாக கணிக்கக் கூடிய கிளைமாக்ஸ். கரு பழனியப்பன் இயக்கத்தில் சேரன் நாயகனாக நடித்த பிரிவோம் சந்திப்போம் படம் மெகா சீரியல்போல இருக்கிறது என அப்போது விமர்சிக்கப்பட்டது. திருமணம் படத்தை ஒப்பிடும்போது அது எவ்வளவோ மேல் எனலாம். மொத்தத்தில் சேரனின் கம் பேக் ரசிகர்களை அவ்வளவாகக் கவரவில்லை என்பதே நிதர்சனம்.

படத்தில் எல்லோரும் அவர் அவர் பங்கை மிகவும் சிறப்பாக செய்துள்ளனர் குறிப்பாக நாயகி காவ்யா சுரேஷ் நாயகன் உமாபதி சுகன்யா படத்திற்கு மிக பெரிய பலம் என்று சொல்லலாம்

க்ளாப்ஸ்
படத்தின் கதைக்களம், இன்றைய கால ஆடம்பர திருமண நிகழ்வுகளின் விளைவுகளை காட்டியதற்காக பாராட்டுக்கள்.

நடிகர், நடிகைகளில் நடிப்பு, குறிப்பாக எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா இருவரும் தங்கள் குடும்ப கஷ்டத்தை சொல்லி அழும் இடம் செம.

ஒன் லைன் என்றாலும் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பூட்டுகின்றார் பாலசரவணன்.

பல்ப்ஸ்
கொஞ்சம் பழைமையான மேக்கிங்.

மொத்தத்தில் இந்த திருமணத்தை யார் கொண்டாடுவார்களோ இல்லையோ, மிடில் க்ளாஸ் பெண் வீட்டார்கள் கொண்டாடுவார்கள்.

Related