
நடிகை ஆண்ட்ரியா பிறந்த தினம்
ஆண்ட்ரியா ஜெரெமையா பின்னணிப் பாடகியும் பின்னணிக் குரல் கொடுப்பவரும் நடிகையும் ஆவார். இவர் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக அறிமுகமானார். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் இவரை நடிகையாக உயர்த்தின.
ஆண்ட்ரியா, சென்னையிலுள்ள, அரக்கோணத்தில், ஆங்கில-இந்தியக் குடும்பத்தில் பிறந்தவர். இவர், நுங்கம்பாக்கத்திலுள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் கல்வி பயின்றார்.[2] இவருடைய தந்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவருடைய இளைய தங்கை, பெல்சியத்திலுள்ள இலெவன் நகரத்தில் துணை ஆய்வாளராக உள்ளார்.[3] ஆண்ட்ரியா தன்னுடைய பத்து வயது முதல், யங் இசுடார்சு என்னும் குழுவில் பாடி வருகிறார். இவர் கல்லூரியில் மேடை நாடகத்திலும் நடித்துள்ளார். இவர், வாழும் கலை மற்றும் கலைஞர்களுக்காகத் த சோ மஸ்ட் கோ ஆன் (The Show Must Go On-TSMGO Productions) என்ற அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார்.
பின்னர், திரைப்படங்களில் பாடல்கள் பாடுவதைத் தொழிலாகச் செய்தார். கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடிய பிறகு, அவருடைய அடுத்த படமான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் சேம்சு சீகலின் ஆங்கில நாவலான தீரெயில்டுவின் கதையைக் கொண்டது. ஆண்ட்ரியா கல்யாணி வெங்கடேசாகவும் தன்னுடைய கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளதால், பிணையக் கைதியாக நடித்தார். சிம்ரன், சோபனா, தபு உள்ளிட்ட நடிகைகளின் நிராகரிப்புக்குப்பின் இக்கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்தார். 2011-ம் ஆண்டு, இவர், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஆகத்து 2011இல் வெளியான மங்காத்தா திரைப்படத்திலும் நடித்தார். பிறகு, கமல்ஹாசனுடன், விஸ்வரூபம் திரைப்படத்திலும், வெற்றிமாறனின், வட சென்னை திரைப்படத்திலும் நடித்தார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
விஸ்வரூபம் 2, வட சென்னை, துப்பறிவாளன், தரமணி, இது நம்ம ஆளு, வலியவன், உத்தம வில்லன், விஸ்வரூபம், சகுனி, ஒரு கல் ஒரு கண்ணாடி, மங்காத்தா, ஆயிரத்தில் ஒருவன்
இவர் பாடிய பாடல் இடம் பெற்ற படங்கள்
இரும்பு குதிரை, வடகறி, தெனாலிராமன், தெகிடி, பிரம்மன், வேட்டையாடு விளையாடு
நடிகை தமன்னா பிறந்த தினம்
தமன்னா ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2005ல் சாந்த் சே ரோசன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார். கல்லூரி திரைப்படம் தமனாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது. இதையடுத்து நடிகர் தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன் ஆகிய படங்களில் நடித்தார். கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா முதலிய படங்களிலும் நடித்துள்ளார். இவர் சிந்தி இனத்தைச் சேர்ந்தவர்.
தமன்னா 1989 ம் ஆண்டு டிசம்பர் 21 ம் தேதி சந்தோஷ் மற்றும் ரஜனி பாட்டியா ஆகியோருக்கு மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் பிறந்தார். அவருக்கு ஆனந்த் என்கிற ஒரு அண்ணன் உள்ளார். அவரது தந்தை ஒரு வைர வியாபாரி ஆவார். இவர் சிந்தி வம்சா வழியைச் சேர்ந்தவர் ஆவார். அவர் மும்பையில் உள்ள மனேக்ஜி கூப்பர் கல்வி அறக்கட்டளை பள்ளி இல் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு எண்கணித காரணங்களுக்காக அவரது திரைப் பெயர் மாற்றப்பட்டது
இவர் நடித்த திரைப்படங்கள்
மெரிசல், பொன் ஒன்று கண்டேன், கண்ணே கலைமானே, ஸ்கெட்ச், கே ஜி எஃப், பாகுபலி 2, தோழா, தர்மதுரை, கத்திச்சண்டை, தேவி, இஞ்சி இடுப்பழகி, பாகுபலி, வீரம், வேங்கை, சிறுத்தை, கோ, தில்லாலங்கடி, சுறா, பையா, படிக்காதவன், கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், அயன், வியாபாரி, கல்லூரி, எனக்கு 20 உனக்கு 18, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க
நடிகர் விடிவி கணேஷ் பிறந்த தினம்
விடிவி கணேஷ் என்றறியப்படும் கணேஷ் ஜனார்தனன், திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமாவார். இவர் சிலம்பரசனுடன் நடித்த திரைப்படங்களில் நன்கு அறியப்படுகிறார்.
தான் தயாரித்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் மூலம் அனைவருக்கும் பரிச்சையமானார். காக்க காக்க திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் தோற்றத்தில் தோன்றிய அவருக்கு இது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தனது தயாரிப்பு நிறுவனமான விடிவி என்பதை பெயரின் அடைமொழியாக இணைத்துக் கொண்டார். வானம் திரைப்படம் வழியாக பஜனை கணேஷ் என்னும் பாத்திரத்தில் சிலம்பரசனுடன் மீண்டும் இணைந்தார். கணேஷ், சிம்புவின் ஒஸ்தி திரைப்படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். 2013-ம் ஆண்டு வெளியான நவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
விநோதன், கோப்பெருந்தேவி, கலகலப்பு 2, சக்க போடு போடு ராஜா, வாலிப ராஜா, தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும், ஹலோ நான் பேய் பேசுறேன், முத்தின கத்திரிக்காய், பென்சில், ரோமியோ ஜுலியெட், வாலு, த்ரிஷா இல்லனா நயன்தாரா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இங்க என்ன சொல்லுது, கப்பல், நவீன சரஸ்வதி சபதம், கண்ணா லட்டு தின்ன ஆசையா, போடா போடி, ஒஸ்தி, வானம், விண்ணைத்தாண்டி வருவாயா, பச்சைக்கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு
இவர் தயாரித்த திரைப்படங்கள்
சக்க போடு போடு ராஜா, இங்க என்ன சொல்லுது
இவர் பாடிய பாடல் இடம் பெற்ற திரைப்படம்
இங்க என்ன சொல்லுது
நடிகர் கோவிந்தா பிறந்த தினம்
கோவிந்தா ஒரு பிரபல இந்திய நடிகர். 1963 டிசம்பர் 21 ல் பிறந்தார். மும்பையில் வசிக்கிறார். 1985 இல் இருந்து நடித்து வருகிறார். 140க்கு மேற்பட்ட இந்திப் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இறுதியாக, 2009-இல் லைப் பார்ட்னர் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். இவர் பிலிம்பேர் விருது, சீ சினி விருது உள்ளிட்ட விருதுகளைப் பல முறை பெற்றவர். இவற்றில், 2000 ஆம் ஆண்டில் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்டி நம்பர் 1, ஜோடி நம்பர் 1, பேட்டி நம்பர் 1, ராவண், சாண்ட்விச், ஜெண்டில்மேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தவர் என்ற பெருமை உண்டு.
