Saturday, March 22
Shadow

உதயநிதியுடன் கூட்டு சேரும் பார்த்திபன்

எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் – ரெஜினா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு காரைக்கால் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கெளரவ் மற்றும் தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கும் படம் ஆகியவற்றுக்கு தேதிகள் ஒதுக்கியிருந்தார். இதில் தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு பல்வேறு இயக்குநர்களில் கதை கேட்டு வந்தார்கள். இறுதியாக புதுமுக இயக்குநர் தளபதி பிரபு கூறிய கதை அனைத்து தரப்பினருக்கு பிடித்திருக்கிறது. இவர் இயக்குநர் பொன்ராம் மற்றும் விக்ரமன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் பார்த்திபன். இவர்களோடு சூரி, நிவேதா , மயில்சாமி உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியம், பாடலாசிரியராக யுகபாரதி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் செப்டம்பர் 19ம் தேதி துவங்கவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து மதுரை, கோவை, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. 2017ம் ஆண்டின் கோடை விடுமுறைக்கு இப்படத்தை வெளியிட முடிவு

Leave a Reply