Wednesday, October 28
Shadow

விக்ரம் மகன் துருவ் வர்மா படத்தின் டைட்டில் ஆதித்தியா வர்மாவாக மாறியது

தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி படம், தமிழில், விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக நடிக்க, வர்மா என்ற பெயரில் ரீ-மேக்கானது. பாலா இயக்கினார். இம்மாதம் படம் ரிலீஸாக இருந்தநிலையில், படம் திருப்தியளிக்காததால் ஒட்டு மொத்த படத்தையும் தூக்கிபோட்டுவிட்டு, புதிதாக படத்தை எடுக்கின்றனர்.

ஹீரோவாக துருவ் தொடர்ந்த நிலையில் ஒவ்வொரு நடிகர்களாக அறிவிக்கப்பட்டு வருகின்றனர். ஹீரோயினாக பாலிவுட் நடிகை பனிதா சாந்து நடிக்கிறார். அர்ஜூன் ரெட்டி படத்தில் துணை இயக்குநராக இருந்த கிரியாசா இயக்குகிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில், படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் ப்ரியா ஆனந்த் இணைந்துள்ளார். மேலும் படத்திற்கு ஆதித்யா வர்மா என புதிய பெயரிட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.