
சிவா, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் வேலைக்காரன் படத்தை ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறை நாட்களாக தேர்ந்தெடுத்து செப்டம்பர் 29-ம் தேதி படம் வெளியாக இருப்பதாக ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே அறிவித்து வீட்டனர் படக்குழுவினர்.
பெரும்பாலான சிவகார்த்திகேயன் படங்கள் சோலோவாக தான் களமிறங்கி வெற்றி பெற்றன, அதே மன கணக்கில் வேலைக்காரனும் போட்டியில்லாமல் வெற்றி பெரும் எப்படியும் 900 தியேட்டர்களுக்கு மேல் பிடித்து விடலாம் என்ற சந்தோஷத்தில் இருந்தனர் படக்குழுவினர்.
இவர்களது இந்த சந்தோசத்திற்கு முதற்கட்ட அதிர்ச்சியாக அமைந்தது முருகதாஸ் மற்றும் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் ஸ்பைடர் படமும் செப்டம்பர் 29-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது தான்.
இதனையடுத்து இரண்டாவது அதிர்ச்சியாக ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள செம படமும் அதே நாழி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது.
இதனால் வேலைக்காரன் படத்தின் சோலோ பர்பாமென்ஸ் கனவு கலைந்து போய் விட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, மேலும் வேலைக்காரன் படத்திற்கு அதிகபட்சமாக 300 தியேட்டர்கள் தான் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
