
இயக்குனர் மோகன் ராஜா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிக பெரிய வரபிரசாதம் என்று தான் சொல்லணும். ஆம் இவரை ரீமேக் இயக்குனர் என்ற பச்சை குத்தி இருந்த நேரத்தில் தனி ஒருவன் என்ற படம் மூலம் அதை எல்லாம் தகர்த்தெறிந்து தமிழ் சினிமாவில் தனகென ஒரு இடத்தை பிடித்தார். அதோடு சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் இடத்தையும் பிடித்தவர். அந்த இடத்தை மேலும் தக்கவைத்துள்ளார் என்று தான் சொல்லணும் கமர்சியல் என்ற பெயரில் சினிமாவை கொள்ளும் இயக்குனர்கள் மத்தியில் கன்டன்ட் அதாவது கதை தான் செயலுக்கு வரும் என்பதை மேலும் நிலைநிறுத்தியுள்ளார். இந்த படம்மூலம்
இவர் சொல்லும் விஷயங்கள் இன்று நாட்டில் நடக்கும் உண்மைகளை மிகவும் ஆணித்தரமாக கூறியுள்ளார் எந்த வித பயமும் இல்லாமல் ஆம் இந்த மாதிரியான கதைகளை கையாள்வது என்பது கத்தி மேல் நடப்பது போல அதை மிகவும் அழகாக நேர்த்தியாக சொல்லி இருக்கிறார். படத்துக்கு மிக பெரிய பலம் வசனம் சிவகார்த்திகேயனும் தான் படத்தின் திரை கதை தனி ஒருவன் படத்தைவிட இன்னும் அருமை அதில் கமர்சியல் மாசாலா இருக்கும் இதில் அப்படி இல்லாமல் கதை மட்டுமே காமெடி நடிகர்கள் அதிகம் இருந்தும் அதோடு நயன்தாரா என்ற அழகு பதுமை வைத்து கொண்டு நாலு டுயட் எல்லாம் போடாமல் கதைக்கு என்ன வேணுமோ அதை மட்டும் சிறப்பாக சொல்லி இருக்கும் விதம் அருமையோ அருமை இதை சினிமா என்பதை விட நமக்கு பாடம் என்று தான் சொல்லணும்
நம் குடும்பம் நம் குழந்தைகள் என்பவர்கள் அனைவரும் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கவேண்டும். அதோ போல நம் நாடு நம் மக்கள் என்ற எண்ணத்தில் இயக்குனர் ராஜா இந்த படத்தை இயக்கியுள்ளார். இவருக்கு இந்த அரசாங்கம் கௌரவித்து மரியாதை செலுத்தவேண்டும். ஒரு சினிமாகாரனாக பார்க்காமல் நம் வாழ்கையாக இந்த படம் பார்க்கவேண்டும் என்பது எமது ஒரு கோரிக்கை, படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம் ஆனால் அது தேவை என்பது தான் தெரிகிறது
அநேகமாக இன்றுமுதல் எல்லா வித வர்த்தக நிறுவனங்கள் முதல் மருத்துவமனை முதலாளிகள் இயக்குனர் மோகன் ராஜாவின் எதிரிகள் தான் ஆனால் அவர் சொன்ன விஷயத்தை நாம் யோசித்தால் மிக பெரிய மாற்றம் வரும் ஜல்லிக்கட்டு இளைஞர்களின் இரவில் எழுப்பிய ஒளி வெளிச்சம் போல ராஜா அனைவரின் வாழ்கையில் ஏற்படுத்தும் வெளிச்சம் தான் இந்த வேலைக்காரன்
படத்தில் எல்லா கதாபாத்திரங்கள் வாழ்ந்துள்ளனர் சிவகார்த்திகேயன் முதல் எல்லோரும் ரோபோ சங்கர், ஆர்ஜே பாலாஜி போன்றோர்கள் காமெடி என்பதை விட கதை ஓட்டம் புரிந்து நடித்து இருப்பது மேலும் பலம் குறிப்பாக சினேகா, விஜய் வசந்த், சார்லி ரோகினி பாகத் பாசில் போன்றோர் படத்துக்கு மிக பெரிய பலம் என்று தான் சொல்லணும்
ஒரு படத்தில் நம் நிஜவாழ்கையில் பல வில்லன்களை சிந்திப்போம் ஆனால் நமக்கு தெரியாது இவன் தான் நமக்கு வில்லன் என்று நமக்கு தெரியாமல் நம் உடன் இருந்து குழிபரிப்பவர்கள் அப்படி தான் இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரமும் பகத் பாசில் மிக சிறந்த நடிகர் ஏன் இவரை ராஜா தேர்ந்துடுத்தார என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் தனி ஒருவனுக்கு அரவிந்த்சாமி போல இந்த படத்துக்கு இவர் என்று தான் சொல்லணும்
இந்த படத்தின் கதை சமுக அக்கறை கொண்ட ஒரு கதை இன்று நம் குழந்தைகள் எப்படி நோய் வாய்ப்பட்டு பல இன்னல்களை சந்திக்கிறது எப்படி நம் குழந்தைகளுக்கு நோய்கள் வருகிறது என்ற கேள்விக்கு பதில் சொல்லி இருக்கும் படம் தான் இந்த படம் படத்தின் கதையை திரையில் பாருங்க அப்ப தான் இந்த படத்தின் அருமை கதையின் பலம் எல்லாம் தெரியும்
சிவாகர்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்துக்கு அதாவது அடுத்த சூப்பர்ஸ்டார் என்று சொல்லும் நேரத்தில் இரண்டு வருடம் கழித்து ஒரு படம் அதுவும் நேர்த்தியான ஒரு படம் ஹீரோ என்பதை விட கதைதான் இயக்குனர் தான் அவர் சொல்லும் கதை தான் முக்கியம் என்று சண்டை காட்சிகள் டுயட் இப்படி எல்லாம் இல்லாமல் தன் மாஸ் காட்டாமால் கிளாஸ் காட்டும் சிவகார்த்திகேயன் உயர்ந்து நிற்கிறார் தான் ஒரு மிக சிறந்த நடிகன் என்று தன் மொத்த திறமையை வெளிபடுத்தியுள்ளார் சிவாகர்த்திகேயன்
நயன்தாரா அழகு பதுமை இல்லை தான் ஒரு சிறந்த நடிகை என்று சமீபகாலமாக நிருபித்து வருகிறார் அதை இந்த படத்திலும் நிருபித்துள்ளார். என்று தான் சொல்லணும் ஆனால் ஒன்று எடை குறைக்குறேன் என்று ரொம்ப மெலிந்து இருப்பது கொஞ்சம் நல்ல இல்லை என்று தான் சொல்லணும் அது மட்டும் கொஞ்சம் மிஸ்ஸிங்
அனிருத் இந்த படம் மூலம் தன்னை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்கிறார் கதைக்கு என்ன தேவை என்று புரிந்து இசையாகம் வளர்த்துள்ளார். என்று தான் சொல்ல தோன்றுகிறது படத்தில் எல்லா பாடல்களும் மாஸ் அண்ட் கிளாஸ். அதைவிட பின்னணி இசை இன்னும் அருமை . அடுத்து ஒளிப்பதிவாளர் ராம்ஜி மேலும் பலம் சேர்கிறார் ஒரு குப்பத்தை இவ்வளவு அழகாக அதுவும் கிளைமாக்ஸ் காட்சியில் சென்னை நகரத்தை இருட்டில் காண்பிப்பது செம அழகு போங்க
மொத்ததில் வேலைக்காரன் நம் மனதின் முதலாளி சமுதயாத்தின் சவுக்கடி Rank 4/5
