Tuesday, March 21
Shadow

காதலியை மறைமுகமாக தாக்கிய நடிகருக்கு பதிலடி கொடுத்த இயக்குனர்

 

நடிகை நயன்தாராவை குறித்து நடிகர் ராதாரவி மேடையிலேயே ஆபாசமாக பேசியது சர்ச்சையாகி, அவர் திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த பிரச்சினையில் பலரும் நயன்தாராவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்,

இந்நிலையில், நடிகர் சித்தார்த் ’மீ டு’ சமயத்தில் சில பெண்கள் அமைதியாகவே இருந்தனர். ஆனால், தற்போது நயன்தாராக்கு பிரச்சினை என்ற வரும் போது, குரல் கொடுக்கின்றனர் என்ற அர்த்தத்தில் டுவிட்டரில் கமெண்ட் செய்திருந்தார் அதற்கு பதிலடியாக இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா மீ டு சமயத்திலேயே பதிவு செய்ததை ரீடுவிட் செய்து பதிலடி கொடுத்துள்ளார்.