Friday, February 7
Shadow

ராதாரவி எதிராக கண்டன கருத்துகளை பதிவு செய்த பிரபலங்கள்

நடிகை நயனதாரா குறித்து நடிகர் ராதாரவி பேசிய சர்ச்சை பேச்சுக்கும் நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ராதரவி என்ன நடிகைகளின் குணங்களுக்குச் சான்று கொடுக்கும் அமைப்பின் தலைவராக உள்ளாரா? எனக் கேள்வி ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவுக்கே இப்படி ஒரு நிலைமை என்றால், மற்ற நடிகைகள் குறித்து எவ்வளவு கீழ்த்தரமாக ராதாரவி பேசுவார் என எண்ணிப்பார்க்கிறேன் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்தவரின் வாயிலிருந்து வந்து விழுந்துள்ள இந்த அருவருப்பான கருத்துகளுக்கு எதிராக யார் நடவடிக்கை எடுப்பார்களோ? என்றும் விக்னேஷ் சிவன் தமது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.

விக்னேஷ் சிவனின் ட்வீட்டிற்கு நடிகையும், ராதாரவியின் சகோதரியுமான ராதிகா சரத்குமார், ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விக்னேஷ் சிவனுக்கு ராதிகா ட்வீட்டரில் பதிலளித்துள்ளார். அதில், இந்த சர்ச்சை பேச்சு தொடர்பாக ராதாரவியை சந்தித்து தனது கண்டனத்தை தெரிவித்ததாகவும் நடிகை ராதிகா ட்வீட் செய்துள்ளார்.