
தெறி வெற்றிக்கு பிறகு விஜய்க்கு தான் படம் பண்ணுவேன் என்று பிடிவாத்ததுடன் காத்து இருந்து அதில் வெற்றி கண்டு இன்று பூஜையுடன் படபிடிப்பு ஆரம்பித்து விட்டார் அட்லி அதிக கூட்டம் தேவையில்லாத ஆட்கள் பத்திரிக்கையாளர்கள் இப்படி யாரும் இல்லாமல் எந்த வித ஆடம்பரம் இல்லாமல் இன்று படபிடிப்பு துவங்கியது.
ECRயில் பனையூர் பகுதியில் எளிமையான முறையில் பூஜையுடன் இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதில் படக்குழுவினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதே இடத்தில் இதன் படப்பிடிப்பும் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் 1980-களில் நடப்பது போன்ற காட்சிகள் கிராமத்து பின்னணியில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் விஜய்யுடன் சில சீனியர் ஆர்டிஸ்ட்கள் மட்டும் நடித்து வருகிறார்கள். மொத்தம் 10 நாள் இந்த ஷெட்யூல் இதே இடத்தில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இதில் கதாநாயகிகள் இல்லாத காட்சிகள் படமாகிறது.
