Monday, April 20
Shadow

“விஜய் 61” படபிடிப்பு எப்போது எங்கு ஆரம்பம், படத்தின் முக்கிய நடிகர்களின் பட்டியல்

பரதன் இயக்கத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் `பைரவா’ படம் பொங்கலுக்கு வெளியாகி திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், விஜய் தனது 61-வது படத்தில் அட்லியுடன் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட 3 முன்னணி கதாநாயகிகள் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். எடிட்டராக ஆண்டனி ரூபனும், ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணும் அட்லியுடன் இணைகின்றனர்.

காமெடியனாக வடிவேலு, சத்யன் விஜய்யுடன் இணைய உள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளதால் பிரம்மாண்ட கூட்டணி அமையும் என்பதில் சந்தேகமில்லை. முன்னதாக அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த `தெறி’ படமும் வரவேற்பை பெற்றதால் `விஜய் 61′ படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி 2-ல் துவங்க உள்ளதாகவும் படக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் முத்த கட்ட படபிடிப்பு சென்னையில் ஆரம்பம் அடுத்த கட்ட படபிடிப்பு அமெரிக்காவிலும் ஆரம்பிக்கபடுள்ளது.

Leave a Reply