Thursday, March 30
Shadow

வைரலாகும் ‘விஜய் 63’ க்காக பிரமாண்டமாக தயாராகி வரும் செட் வீடியோ

தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லீ-விஜய் கூட்டணியில் உருவாக்கும் படம் ‘விஜய் 63’. விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் முக்கிய காட்சிகள் கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற இருப்பதால் அதற்கான பிரம்மாண்ட செட்டை படக்குழு அமைத்து வருகிறது. சென்னை அருகே உள்ள ஈ.வி.பி ஸ்டுடியோவில் பிரமாண்ட கால்பந்தாட்ட மைதானம் அமைக்கும் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளதால் அடுத்த சில நாட்களுக்கு விஜய் உட்பட படகுழுவினர் இங்குதான் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த பிரமாண்ட ஸ்டேடியத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது