Thursday, October 29
Shadow

தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் உபயோகிக்கும் கிளாசிக் கார் எது தெரியுமா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிக சிறப்பாக உருவாகி வரும் படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்யுடன் முதன் முறையாக விஜய் சேதுபதி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் கூட இப்படத்தில் இருந்து விஜய் குரலில் ஒரு குட்டி ஸ்டோரி பாடல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றது.
மேலும் இந்த பாடல் பார்ப்பதற்கு மிக அருமையாக வடிவமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் தற்போது இப்பாடலில் விஜய் ஒரு கிளாஸ்ஸனா கார் ஒன்றை பயன்படுத்தினார். மேலும் தற்போது இந்த கார் தான் விஜய் இப்படத்தில் பயன்படுத்தும் கார் என்று ஒரு படம் இணையத்தில் வெகு வேகமாக பரவி வருது.