ஒரு சில நடிகர்களை பார்ப்பதே அதிசயம் அப்படி பார்த்தால் அவரிடம் பேசுவது அதை விட கடினம் இந்த சூழ்நிலையில் தளபதி விஜய் அடிக்கடி ரசிகர்களுக்கு தரிசனம் கொடுப்பார் சில சமயம் சர்ப்பிரைஸ் வேறு கொடுப்பார் இப்படி இருந்தும் இவரை பார்க்க பின் தொடரும் ரசிகர் பட்டாளம் அதிகம்
சர்கார் படத்தை தொடர்ந்து, அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். நயன்தாரா, கதிர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்திற்கு ரஹ்மான் இசையமைக்கிறார். ஏஜிஎஸ்., நிறுவனம் தயாரிக்கிறது.
விஜய்யின் 63வது படமாக உருவாகும் இப்படம், விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. விளையாட்டு பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. விஜய்யின் படப்பிடிப்பு நடக்கும் இடங்களை அறிந்து, அங்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் கூடுவது அதிகரித்து கொண்டே வருகிறது. விஜய், அவர்களை சந்தித்து கையசைத்துவிட்டு செல்கிறார்.
இந்நிலையில் விஜய்யின் காரை, சில ரசிகர்கள் பைக்கில் துரத்தி சென்றுள்ளனர். அவர்கள் விஜய்யை நோக்கி கத்த, விஜய் அவர்களை பார்த்து கை அசைத்துவிட்டு, இப்படி வேகமாக வராதீர்கள், பத்திரமாக வீட்டுக்கு செல்லுங்கள், இதுபோன்று பின்தொடராதீர்கள் என அறிவுரை கூறி உள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.
