சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் வந்தா ராஜாவாதான் வருவேன். சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்கியிருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமால் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இந்தப் படத்தை அடுத்து நடிகை ஹன்சிகாவின் 50-வது படமான மஹா படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். மஹா படத்தில் நடிக்கும் சிம்பு, வெங்கட் பிரபுவின் மாநாடு படத்திலும் நடிக்கிறார். இதற்காக தனது உடல் எடையைக் குறைக்க நடிகர் சிம்பு லண்டன் சென்றுள்ளார்.