Wednesday, April 30
Shadow

மாரியப்பன் தங்கவேலுக்கு பிரபல நடிகர் விஜய் பாராட்டு

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை புரிந்த தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுக்கு பிரபல நடிகர் விஜய் தனது பாராட்டையும், வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ரியோ ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று நம் எல்லோருக்கும் பெருமையை தேடி தந்துள்ள உங்களுக்கு என் பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.

மேலும் நீங்கள் எதிர்காலத்தில் பல சாதனைகள் புரிய வாழ்த்துவதாகவும், மாரியப்பனுக்கு கூறியுள்ள வாழ்த்து செய்தியில் அவர் கூறிப்பிட்டுள்ளார்.

பிரதமர், ஜனாதிபதி என பலரது வாழ்த்து மழையில் நனைந்து வரும் மாரியப்பனுக்கு தமிழக அரசு 2 கோடி ரூபாய் பரிசு தொகை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply