Wednesday, October 28
Shadow

விளையாட்டில் சாதிக்கும் தளபதி விஜய் மகள்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் ராஜா ஏன் சூப்பர் ஸ்டார் இவர் சினேம்மாவில் ஜொலிக்கிறார் இவர் மகள் விளையாட்டில் ஜொலிக்கிறார். ஆம் இறகு பந்து போட்டியில் பள்ளி கூடத்தில் மிக பெரிய அளவில் சாதித்து வருகிறார்.தெறி படத்தில் இவர் தன் அப்பாவுடன் சேர்ந்து நடித்த போது இவருக்கு சினிமாவில் தான் ஆசை என்று நினைத்த நமக்கு பெரிய ஏமாற்றம் கொடுத்து விளையாட்டில் சாதிக்க போய்விட்டார்.

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், சமீபத்தில் ஜங்ஷன் என்ற குறும் படத்தை இயக்கி, நடித்து இணையதளத்தில் வெளியிட்டிருந்தார். அதையடுத்து சில பிரபலங்களை அவர் பேட்டி எடுத்த வீடியோக்களும் வெளியானது.

மகன் சினிமா பக்கம் ஆர்வம் காட்ட, விஜய்யின் மகள் திவ்யா சாஷாவோ, பேட்மிண்டன் விளையாட்டு வீராங்கனையாக அசத்தி வருகிறார். சென்னை அளவில் சமீபத்தில் நடத்தப்பட்ட பேட்மிண்டன் போட்டியில் சாஷா கலந்து கொண்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

மேலும், தனது மகள் பேட்மிண்டன் விளையாட்டில் பங்குபெறும் போதும், அதை விஜய்யும் அவ்வப்போது சென்று கண்டுகளித்து மகளுக்கு உற்சாகமளித்து வருகிறார்